பிந்திய செய்திகள்

பாறை இடுக்கில் சிக்கிய வாலிபர்-2நாட்களுக்கு பின் உயிருடன் மீட்பு

கேரளாவில் உள்ள மலம்புழையில் காட்டுப்பகுதிக்குள் நேற்று முன்தினம் பாலக்காட்டை சேர்ந்த பாபு (வயது28). இவரும் வேறு 3 நண்பர்களும் மலையேற சென்றனர்.

மதியம் பாபு மலையில் இருந்து இறங்கியபோது, பள்ளமான இடத்தில் பாறை இடுக்குகளுக்குள் தவறி விழுந்தார். அவருடன் சென்றவர்கள் அவரை மீட்க முயற்சி செய்தும் முடியவில்லை.

இதைத்தொடர்ந்து அவர்கள் மலையில் இருந்து இறங்கி மலம்புழை வனத்துறையினரிடம் தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து, மலை ஏற்ற வீரர்களும், விபத்து பேரிடர் மீட்பு படையினரும் விரைந்து சென்றனர். ஆனால் பாபு சிக்கியுள்ள இடத்தை அவர்களால் அடையாளம் காணமுடியவில்லை.

Kerala trekker trapped on hill, state seeks help from Army Force

இதைத்தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் தேடும்பணி தொடங்கியது. நீண்ட நேரத்திற்கு பின் வாலிபர் பாபு சிக்கியுள்ள இடம் கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர், அவரை மீட்க ராணுவம் உதவி கேட்கப்பட்டது. ராணுவம் நேற்று இரவில் இருந்து அவரை மீட்கும் பணியில் ஈடுபட்டது.

இந்த நிலையில், இன்று காலை பாபு மீட்கப்பட்டார். கடந்த இரண்டு நாட்களாக உணவு, தண்ணீர் இன்றி தவித்த வாலிபர் மீட்கப்பட்டு ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளார்

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts