Home உலகம் இந்தியா இந்திய சுற்றுலாப் பயணிகளுக்காக அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

இந்திய சுற்றுலாப் பயணிகளுக்காக அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

0
இந்திய சுற்றுலாப் பயணிகளுக்காக அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

கொரோனா தொற்றுப் பரவல் குறைவடைந்து வருகின்ற நிலையில்,
இலங்கையின் சுற்றுலாத் துறையை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில்
இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு, ‘வருகையின் பின்னரான விசா’ அனுமதியைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இலங்கையின் மிகப்பெரிய சுற்றுலா சந்தையாக இந்தியா உள்ளதென்றும் கடந்த ஆண்டு இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டவர்களுள் 42 சதவீதமானோர் இந்திய சுற்றுலாப் பயணிளே என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இந்திய சுற்றுலாப் பயணிகள், இலங்கைக்கு வந்ததன் பின்னர், தங்களது விசா அனுமதியைப் பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here