பிந்திய செய்திகள்

தேர்தலில் வேட்பாளர் உயிரிழப்பு ! தேர்தல் ஒத்திவைப்பு

தமிழகத்தில் நகரபுற உள்ளாட்சித் தேர்தலுக்கு ஒரு வாரம் உள்ள நிலையில் 19 வது வார்டு அதிமுக வேட்பாளரான 64 வயதுடைய அன்னதாட்சி என்பவர் நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு (12-02-2022) திடீரென மாரடைப்பால் காலாமானார்.
தேர்தல் எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் மயிலாடுதுறை வார்டுக்கான வேட்பாளர் ஒருவர் மரணமடைத்துள்ளார்.

இந்நிலையில் மயிலாடுதுறை வார்டுக்கான தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மயிலாடுதுறை நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளது.

மயிலாடுதுறை நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் 211 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இதனையடுத்து அங்கிரிக்கப்பட்ட கட்சியின் வேட்பாளர் இறந்ததால் மயிலாடுதுறை நகராட்சி 19 வது வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தல் விதி 34(1)(c) தமிழ்நாடு நகராட்சிகள், பேரூராட்சிகள், மற்றும் மாநகராட்சி தேர்தல்கள் 2006 விதிகளின் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக மயிலாடுதுறை நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலரும், நகராட்சி ஆணையருமான பாலு தெரிவித்துள்ளார்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts