பிந்திய செய்திகள்

விச்சிப் பூ உங்கள் வீட்டில் இருக்கா இனி கவலை வேண்டாம்

உலகில் மூல நோய் என்றாலே சிலர் முகம் சுழிப்பவர்கள் தான் அதிகமாக இருக்கின்றனர், இதற்கான காரணம் இந்த நோயின் வெளிப்பாடு தான். இன்று மூல நோய் என்றால் என்ன? இதற்கான தீர்வு என்ன என்று பார்க்கலாம். மூல நோய் என்பது மலக்குடலில் உள்ள இரத்த நாளங்களில் ஏற்படுகின்ற வீக்கமாகும்.

மூல நோய் ஏற்படுவதற்கு ஆசன வாயின் நரம்புகளில் ஏற்படும் அழுத்தம் தான் காரணம். இந்த நோய் எதனால் ஏற்படுகின்றது என பார்க்கலாம். குழந்தை பிறப்பு,மலச்சிக்கல், பாரம் தூக்குதல், இதை விட சிலருக்கு பரம்பரையாக கூட வரலாம்.

இதன் அறிகுறிகள் என்ன என பார்த்தால், மூல நோய் இருந்தால் ஆசன வாய் எரிச்சல், வலி, மலத்துடன் இரத்தம் கசிதல், ஒரு இடத்தில் இருக்க முடியாமல் ஆசன வாய் வலி, போன்றவை தான் இந்த நோயின் முதல் அறிகுறிகள்.

மூல நோய் அதாவது piles உள்ளவர்கள் கண்டிப்பாக இளநீர் குடிக்க வேண்டும். மாதுளை பழம், பேரீச்சை பழம்,கொய்யாப் பழம், வாழைப்பழம் போற்றவைகளை அதிகமாக சாப்பிடலாம். சரி இதற்கான இயற்கை மருத்துவங்களை பார்க்கலாம். தேவையானவை: கறுப்பு உலர் திராச்சை, பசும் பால். பசும் பாலில் உலர் திராட்சையை போட்டு நன்றாக கொதிக்க வைய்யுங்கள்.

கொதித்ததும் இறக்கி ஆற வையுங்கள். நன்றாக ஆறிய பின் உலர் திராட்சையை சாப்பிட்டு அதை ஊற வைத்த பாலையும் குடியுங்கள். இப்படி இரண்டு மூன்று நாட்கள் குடித்தாலே மூல நோய் தீர்ந்துவிடும். 2 கற்றாலை ஜெல்லை ஆசன வாயில் மெதுவாக தடவி வர எரிச்சல், புண், போன்றவை தீர்ந்துவிடும்.

வெட்சிப் பூ என்கிற Ixora பூ . இது மருந்து கடைகளில் இலகுவாக கிடைக்க கூடிய மூலிகை தான். இதனை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பின் பாத்திரம் ஒன்றினை அடுப்பில் வைத்து விச்சி ப் பூவை பாத்திரத்தில் போட்டு அது மூழ்கும் அளவு சுத்தமான நெய் விட்டு நன்றாக கிளறி பதம் ஆகும் வரை மிதமான சூட்டில் வைக்க வேண்டும்.

உருண்டை பிடிக்கும் பதம் வந்ததும் சிறு சிறு உருண்டைகளாக பிடித்துக் கொள்ளுங்கள். இந்த உருண்டையை காலை மற்றும் இரவில் சாப்பிட்டு வாருங்கள். இதனால் உள் மூலம், வெளி மூலம், சீழ் மூலம் அனைத்தும் சரியாகும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts