பிந்திய செய்திகள்

இரத்த ஓட்டத்தை சீர்படுத்தும் ஆரஞ்சு பழம்!

ஆரஞ்சு பழத்தில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. அதனால் நம் உடலில் உள்ள கொழுப்பை குறைப்பதற்கு உதவுகிறது.

முகத்தை பொலிவாக வைப்பதற்கு உதவுகிறது. இதில் பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம் என அதிக சத்துக்கள் உள்ளன. நமக்கு தெரியாத பல நன்மைகள் ஆரஞ்சு பழத்தில் உள்ளன.

ஆரஞ்சு பழம் நம்முடைய உடல் எடையை குறைப்பதற்கு உதவுகிறது. இது கல்லீரலை சுத்தமாக வைப்பதாலும், உடலில் இரத்த ஓட்டத்தை சீர்படுத்துவதாலும் உடல் எடையை குறைக்கிறது. உடல் எடையை குறைப்பதற்கு ஆரஞ்சு பழத்தை தினமும் சாப்பிடலாம்.

மூட்டுவலி இருப்பவர்கள் ஆரஞ்சு ஜூஸை தினமும் சர்க்கரை இல்லாமல் குடித்து வந்தால், மூட்டுவலியை குணப்படுத்துவதற்கு உதவுகிறது.

இரத்த அழுத்தம் இருப்பவர்கள் ஆரஞ்சு பழத்தை சாப்பிட்டால், 1ஆரஞ்சு பழத்தில் உள்ள மெக்னீசியம் இரத்த அழுத்தத்தை சீராக வைப்பதற்கு உதவுகிறது.

இதயநோய் இருப்பவர்கள் ஆரஞ்சு பழத்தை சாப்பிடுவது நல்லது. ஏனென்றால் ஆரஞ்சு பழத்தில் பொட்டாசியம் அதிக அளவில் இருப்பதால் இதயத்தை ஆரோக்கியமாக வைப்பதற்கு உதவுகிறது.

ஆரஞ்சு பழத்தை நாம் சாப்பிடுவதால் நம்முடைய பற்கள் வலுவாக இருக்கும். ஏனென்றால் ஆரஞ்சு பழத்தில் உள்ள கால்சியம் பற்களை வலுவாக வைப்பதற்கு உதவி செய்கிறது.

ஆரஞ்சு பழத்தில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. ஆரஞ்சு பழம் நம்முடைய உடல் எடையை குறைப்பதற்கு உதவுகிறது.

இது கல்லீரலை சுத்தமாக வைப்பதாலும், உடலில் இரத்த ஓட்டத்தை சீர்படுத்துவதாலும் உடல் எடையை குறைக்கிறது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts