பிந்திய செய்திகள்

இரத்த அழுத்தத்தை குறைத்து இதயத்தை பாதுகாக்க வேண்டுமா? இந்த உணவுகள சாப்பிடுங்கள்

சர்க்கரை நோய் மற்றும் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. பெரும்பாலும் இந்த இரண்டு நாள்பட்ட நோயால் பாதிக்கப்படாத குடும்பங்களே இல்லை எனலாம். பெரும்பாலும் 35 அல்லது 40 வயதை கடந்தவர்களுக்கு இந்நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இது இதய நோய் மற்றும் பக்கவாதம் போன்ற உயிரிழப்பு அபாயத்தையும் உருவாக்கலாம். இரத்த அழுத்தம் என்பது மோசமான ஆரோக்கிய பிரச்சனையாகும். ஆனால் அதிஷ்டவசமாக அதை நம்மால் கட்டுப்படுத்த முடியும்.

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த சில உணவுகள் வெகுவாக உதவுகின்றன. அவை அதிகமான அளவில் ஃபிளாவனாய்டுகளை கொண்டுள்ளன. மேலும் இவை இதய ஆரோக்கியத்திற்கும் உதவக்கூடிய உணவுகளாக உள்ளன. எனவே அந்த உணவுகள் குறித்து இக்கட்டுரையில் விரிவாக காணலாம்.
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

ஃபிளாவோனால் நிறைந்த உணவுகள் மற்றும் இரத்த அழுத்தம்

மன அழுத்தம் நிறைந்த வேலை, வாழ்க்கை, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் மற்றும் தூக்கமின்மை போன்றவற்றால் பெரும்பாலான மக்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இதனால், இரத்த அழுத்தம் மற்றும் இதயம் தொடர்பான பிற நோய்கள் போன்ற உடல்நலப் பிரச்சினைகளை அனுபவிக்கிறார்கள். சமீபத்திய ஆய்வின்படி, ஃபிளவனால் நிறைந்த உணவுகள் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் என்று கூறப்படுகிறது.

எச்சரிக்கை! இறப்பை ஏற்படுத்தும் திடீர் மாரடைப்பு ஏன் குளிர்காலத்தில் அதிகமாக ஏற்படுகிறது தெரியுமா? எச்சரிக்கை! இறப்பை ஏற்படுத்தும் திடீர் மாரடைப்பு ஏன் குளிர்காலத்தில் அதிகமாக ஏற்படுகிறது தெரியுமா?

ஃபிளாவனாய்டு என்றால் என்ன?

ஃபிளாவனாய்டு பொதுவாக பழங்கள் மற்றும் காய்கறிகளின் வழியே கிடைக்கும் இயற்கையான சத்தாகும். இதில் ஆண்டி ஆக்ஸிடேடிவ், அழற்சி எதிர்ப்பு, மியுட்டஜெனிக் மற்றும் ஆண்டி கார்சினோஜெனிக் பண்புகள் உள்ளன. ஃபிளாவனாய்டுகள் உடல் ஆரோக்கியத்திற்கு பல வித நன்மைகளை புரிகின்றன. மேலும், இவை பாலிபினால்கள் எனப்படும் ஆன்டிஆக்ஸிடன்ட்களின் குழுவைச் சேர்ந்த உணவின் உயிரியல் கூறுகள். இந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் செல்களை தேய்மானத்திலிருந்து பாதுகாக்க உதவுவதோடு, நாள்பட்ட நோய்களைத் தடுக்கவும் உதவுகின்றன.

உடலில் உள்ள அதிகப்படியான கெட்ட கொழுப்பைக் குறைக்கணுமா? அப்ப இந்த ஜூஸை தினமும் குடிங்க…உடலில் உள்ள அதிகப்படியான கெட்ட கொழுப்பைக் குறைக்கணுமா? அப்ப இந்த ஜூஸை தினமும் குடிங்க…

ஆய்வு

அறிவியல் அறிக்கைகளில் வெளியிடப்பட்ட 25,000 பேரிடம் மேற்கொண்ட விரிவான ஆய்வு, அவர்கள் சாப்பிட்டதற்கும் அவர்களின் இரத்த அழுத்தத்திற்கும் உள்ள தொடர்பைக் கூறுகிறது. மிகக் குறைந்த 10% ஃபிளாவனோல் உட்கொள்பவர்களுக்கும், அதிக அளவு 10% உட்கொள்பவர்களுக்கும் இடையே 2 முதல்

4 எம்எம் எச்ஜி வரையிலான இரத்த அழுத்தத்தில் உள்ள வித்தியாசத்தைப் பற்றி ஆய்வு பேசுகிறது. இந்த ஆய்வுக்காக, ஆராய்ச்சியாளர்கள் ஊட்டச்சத்து பயோமார்க்ஸர்களைப் பயன்படுத்தி ஃபிளாவனோல் உட்கொள்ளலை புறநிலையாக அளவிட்டனர். இவை உணவு உட்கொள்ளல், வளர்சிதை மாற்றம் அல்லது மனித இரத்தத்தில் இருக்கும் ஊட்டச்சத்து நிலை ஆகியவற்றின் குறிகாட்டிகளாக உள்ளனர்.

நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?

பெரிய மக்கள்தொகையின் முந்தைய ஆய்வுகள் எப்போதுமே முடிவுகளை எடுக்க சுய-அறிக்கை தரவுகளை நம்பியிருப்பதாக ஆய்வு நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் இந்த அளவின் முதல் தொற்றுநோயியல் ஆய்வு இதுவாகும். ஒரு குறிப்பிட்ட உயிரியக்க கலவை மற்றும் ஆரோக்கியத்திற்கு இடையே மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், ஃபிளாவனால் நுகர்வு மற்றும் குறைந்த இரத்த அழுத்தம் ஆகியவற்றுக்கு இடையே ஒரு குறிப்பிடத்தக்க தொடர்பு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். தேநீர் மற்றும் சில பழங்களில் ஃபிளாவனால் காணப்படுகிறது.

ஃபிளவனோல்களின் நல்ல ஆதாரங்கள் யாவை?

அறிக்கைகளின்படி, ஃபிளவனோல்களின் முக்கிய ஆதாரங்கள் தேநீர், கோகோ, ஆப்பிள், பேரிக்காய் மற்றும் பெர்ரி ஆகும். ஊட்டச்சத்து நிபுணர்களின் கூற்றுப்படி, ஃபிளவனால்கள் நிறைந்த பிற உணவுகள் நட்ஸ்கள், வெங்காயம் மற்றும் சாக்லேட்.

சாக்லேட் மற்றும் ஒயின்

சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, இதய ஆரோக்கியம் என்ற பெயரில் சிறிதளவு சாக்லேட் சாப்பிடுவதும் ஒரு கிளாஸ் ஒயின் குடிப்பதும் மோசமான யோசனை அல்ல. ஃபிளவனோல்களின் மற்றொரு சிறந்த ஆதாரம் சிவப்பு ஒயின். இந்த உணவுகளை தொடர்ந்து உட்கொள்வது மிகவும் நன்மை பயக்கும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.

இறுதிகுறிப்பு

டீ மற்றும் ஒயின் ஆகியவை முறையே கிழக்கு மற்றும் மேற்கு சமூகங்களில் ஃபிளாவனாய்டுகளின் முதன்மை உணவு ஆதாரங்களாகும். தவிர, இலை காய்கறிகள், வெங்காயம், ஆப்பிள்கள், பெர்ரி, செர்ரி, சோயாபீன்ஸ் மற்றும் சிட்ரஸ் பழங்கள் உணவு ஃபிளாவனாய்டுகளின் முக்கிய ஆதாரமாகக் கருதப்படுகின்றன. உங்கள் உணவில் ஃபிளாவனாய்டுகளைச் சேர்க்க எளிதான வழி தேநீர் குடிப்பதாகும். பச்சை, ஓலாங் மற்றும் கருப்பு டீகள் அனைத்தும் அதிக அளவு ஃபிளவனோல்களைக் கொண்டிருக்கின்றன, அவை இருதய மற்றும் அறிவாற்றல் ஆரோக்கியத்திற்கான நன்மைகளுக்காக ஆய்வு செய்யப்பட்டுள்ளன.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts