பிந்திய செய்திகள்

சேமிப்புக்கு இலக்கணமாகிய இளைஞன்!!

அசாம் மாநிலத்தின் பர்பட்டா மாவட்டத்தில் ஹவுலி என்ற கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் தான் 7,8 மாதங்களாக சேர்த்த நாணயங்களை கொண்டு தான் விரும்பிய ஸ்கூட்டரை வாங்கியுள்ளார்.மேலும்

இவர் சிறிய கடை ஒன்றை நடத்தி வருகிறார்.இவருக்கு நீண்ட நாளாக ஸ்கூட்டர் ஒன்றை வாங்கவேண்டும் என்ற ஆசையில் சுமார் 7,8 மாதங்களாக தனக்கு வரும் வருமானத்தில் ஒரு சிறிய தொகையை சில்லறையாக சேமித்துள்ளார்.

ஸ்கூட்டர் வாங்குவதற்கான போதிய பணம் சேர்ந்ததும் அவர் சேமித்து வைத்து இருந்த சில்லறை நிறைந்த நாணய முட்டைகளை தூக்கிக்கொண்டு ஸ்கூட்டர் ஷோரூம்க்கு சென்றுள்ளார்.

அதனை தொடர்ந்து அந்த இளைஞரின் செயலை கண்டு வியப்படைந்த ஷோரூம் ஊழியர்களும் அவரை அன்புடன் வரவேற்று, அவர் கொண்டு வந்த மூட்டைகளில் இருந்த நாணயங்களை எண்ணியுள்ளனர்.

அதில் அவர் விரும்பிய ஸ்கூட்டருக்கான போதுமான நாணயங்கள் இருக்கவே ஸ்கூட்டர் வாங்குவதற்கான ஆவணங்களில் கையொப்பம் வாங்கி கொண்டு அந்த ஸ்கூட்டருக்குரிய சாவியையும் அந்த இளைஞரிடம் வழங்கியுள்ளனர்.

இந்த நிலையில் அந்த இளைஞரின் கடும் உழைப்பையும், பொறுமையையும், மற்றும் சேமிக்கும் திறனையும் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts