பிந்திய செய்திகள்

இந்தியாவில் ஏழு வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு இன்று

இந்தியாவில் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்ற நிலையில், இன்று ஏழு வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இதன்படி தமிழகத்தின் சென்னை, மதுரை, அரியலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் 5 வார்டுகளில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

குறித்த வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு ஆரம்பமாகிய நிலையில், மாலை 6 மணிவரை நடைபெறவுள்ளது. கொரோனா அறிகுறிகள் உள்ளவர்கள் மற்றும் பாதிப்புக்கு உள்ளானவர்கள் மாத்திரம் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

மறுவாக்குப்பதிவு நடைபெறும் மையங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன், கண்காணிப்பு பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் மறுவாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் உள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts