பிந்திய செய்திகள்

மாநில அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது!

தமிழகத்தில் எந்த பாட திட்டத்தை பின்பற்றுவது என்பது மாநில அரசின் கொள்கை முடிவு என்றும், அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது எனவும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஜெ.ஜெ கட்சி நிறுவனர் பி.ஏ.ஜோசப் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‛தமிழகத்தில் ஒரே மாதிரியான கல்வியை கொண்டுவர வேண்டும்.

குறிப்பாக தமிழகத்தில், அரசு பள்ளிகளில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்குழு பாடத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (பிப்.,23) விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் மனுதாரரிடம், தமிழகத்தில் அரசு பள்ளிகளில் என்.சி.இ.ஆர்.டி. பாடத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று எந்த சட்டத்தில் எந்த விதி உள்ளது என்று சரமாரியான கேள்விகளை முன்வைத்தனர்.

மேலும் எந்த பாட திட்டத்தை பின்பற்றுவது என்பது மாநில அரசின் கொள்கை முடிவு. அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிடமுடியாது; அரசின் நிர்வாகத்தை நீதிமன்றம் நடத்தவும் முடியாது எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்தனர்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts