பிந்திய செய்திகள்

காலையில் காபி குடிக்க முன் ஏன் தண்ணீர் குடிக்க வேண்டும்?

பலருக்கும் குளிர்காலத்தில் காலையில் எழுந்ததும் டீ அல்லது காபி அருந்துவது கொடுக்கும் ஆனந்தம் அளப்பரியது. இது தான் நம் நாளை எதிர்கொள்ள நம்மை தயார்படுத்துகிறது. அதோடு, காலை எழுந்தவுடன் நாம் அருந்தும் பானம் தான் உடலின் ஆற்றல் அளவை அதிகரிப்பதோடு, மூளையின் செயல்பாடுகளையும் அதிகரிக்கிறது. நீங்கள் காலையில் எழுந்தவுடன் உங்களுக்கு பிடித்த சூடான பானத்தைத் தான் முதலில் சாப்பிடுகிறீர்கள் எனில் அது தவறான செயல்.

ஊட்டச்சத்து நிபுணர்களின் கூற்றுப்படி, காபி ஒரு டையூரிடிக் ஆகும். நம் உடல் இரவு முழுவதும் தண்ணீர் இல்லாமல் இருக்கும்.

இது நீரிழப்புக்கு ஆளாக்கும். இது பல ஆரோக்கிய விளைவுகளை ஏற்படுத்தும். நீரிழப்புடன் இருக்கும்போது டையூரிடிக் ஆன காபியை அருந்துவது உடல் நலப் பிரச்சனையை மேலும் தூண்டுவதாக கூறுகின்றனர்.

இதனால் தான் காலை எழுந்தவுடன் காபி அல்லது டீ அருந்தக்கூடாது என்று கூறுகின்றனர்.

​தவிர்ப்பது எப்படி?

எழுந்தவுடன் காபி குடிப்பதால் ஏற்படும் உடல்நல அபாயங்களைத் தவிர்ப்பதற்கான எளிய தீர்வு என்னவெனில், காலையில் எழுந்தவுடன் ஒரு கிளாஸ் தண்ணீரைக் குடிப்பதே ஆகும்.

இப்படி செய்வதன் மூலம் உடலில் உள்ள நச்சுகள் வெளியேற்றவும், நீரிழப்பு ஏற்படாமல் இருக்கவும் செய்ய முடியும். நாள் முழுவதும் சிறந்த உடல் செயல்திறன் மற்றும் சுறுசுறுப்பாக இருக்க விரும்பினால் நீங்கள் எழுந்தவுடன் உடனடியாக உடலை நீரேற்றம் செய்ய வேண்டும்.

இந்த நீரேற்றம் உங்கள் மூளையை ஹைட்ரேட் செய்ய உதகிறது. அந்த நீரில் அரை டீஸ்பூன் கடல் உப்பைச் சேர்ப்பது இன்னும் சிறந்தது. இதன் மூலம் உங்கள் அட்ரீனல் சுரப்பிகளின் ஆற்றல் உற்பத்தியை ஆதரிப்பதோடு, அதிகரிக்கவும் செய்கிறது,

​தண்ணீர் குடிப்பதற்கு முன் காபி சாப்பிட்டால் என்ன நடக்கும்?

தண்ணீர் குடிப்பதற்குமுன் காபி குடிப்பது முட்டாள்தனமான செயல் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். இப்படி செய்வதன் மூலம் உங்கள் அட்ரீனல் சுரப்பிகளுக்கு அதிக அழுத்தம் ஏற்படும் என்று கூறுகின்றனர்.

தினமும் காலையில் ஒரு கப் காபி குடிப்பதைத் தவிர்க்க முடியாத ஒருவராக நீங்கள் இருந்தால், சில உடல்நலப் பிரச்சனைகளால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts