பிந்திய செய்திகள்

தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்

உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க ருமேனியா தலைநகர் புகாரெஸ்டுக்கு ஏர் இந்தியா விமானம் ஒன்று அதிகாலை 3.40 மணிக்குப் புறப்பட்டது.

மும்பை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட இந்த விமானம் காலை காலை 10 மணியளவில் புகாரெஸ்ட் நகரத்தில் தரையிறங்கியது. சாலை மார்க்கமாக உக்ரைன்-ருமேனியா எல்லை வந்தடைந்த இந்தியர்கள் இந்திய அரசு அதிகாரிகள் மூலம் புகாரெஸ்ட் அழைத்து வரப்படுகின்றனர்.

அங்கிருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் இந்தியா அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி புகாரெஸ்டுக்கு 2 விமானங்கள் வெள்ளிக்கிழமை இரவு இயக்கப்படும் என்று ஏர் இந்தியா அறிவித்திருந்தது. ஆனால், அவை திட்டமிட்டபடி புறப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts