பிந்திய செய்திகள்

காதலிக்கு திருமணம்; முன்னாள் காதலன் எடுத்த புதிய முடிவு

தமிழகத்தின் நெல்லை மாவட்டம், களக்காடு அருகே காதலி தன்னை விட்டு, வேறு ஒருவரை திருமணம் செய்ய ஏற்பாடு நடந்ததால் ஆத்திரமடைந்த காதலன் அப்பெண்ணுடன் இருக்கும் புகைப்படத்தை போஸ்டராக அடித்து ஒட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் அப்பகுதியை சேர்ந்த விஜய், பறவைகளை விற்பனை செய்யும் கடை நடந்தி வரும் நிலையில் , மேலபத்தை பகுதியை சேர்ந்த கிருபா என்றப் பெண்ணும், கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் 10 தினங்களுக்கு முன்பாக கிருபாவிற்கு வேறு ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

இதனை அறிந்து ஆத்திரமடைந்த விஜய், கிருபாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை போஸ்டர் அடித்து ஊர் முழுவது கவிதை வசனத்தோடு சேர்த்து ஒட்டியுள்ளார்.

அத்துடன் கிருபாவுக்கு நிச்சயம் செய்த மாப்பிள்ளை வீட்டிலும் போஸ்டரை ஒட்டியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த கிருபாவின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதை அடுத்து பொலிசார் பெண்னின் முன்னாள் காதலனை தேடி வருகின்றனர்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts