பிந்திய செய்திகள்

இந்திய மாணவன் ரஷ்ய தாக்குதலில் உயிரிழப்பு!!!

உக்ரைன் ரஷ்யா இடையே ஆறாவது நாளாக உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொண்டுவரும் தாக்குதலில் உக்ரைனில் வசித்து வந்த இந்திய மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கார்கீவ், கீவ் போன்ற நகரங்களில் ரஷ்யா நடத்தி வரும் கடும் தாக்குதலில் இந்திய மாணவர்கள் வெளியேர முடியாமல் தவித்து வருகின்றனர்.

இதற்கிடையே, மாணவர்கள் உட்பட இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையாக ஆபரேஷன் கங்கா திட்டத்தை இந்திய மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

இந்நிலையில், இந்த போர் களத்தில் சிக்கி உக்ரைன் கார்கீவ் நகரத்தில் உள்ள மருத்துவ கல்லூரி ஒன்றில் படித்து வந்த கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த நவீன் சேகரப்பா என்கிற மாணவர் உயிரிழந்துள்ளார்.

இதனை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts