பிந்திய செய்திகள்

இந்தியாவில் நீட் தேர்வு எழுத வயது எல்லை இல்லை!

இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு எழுத வயது எல்லை இல்லை என தேசிய தேர்வு முகமைக்கு தேசிய மருத்துவ ஆணையம் எழுதியுள்ள கடிதத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

குறித்த கடித்தில் எதிர்வரும் நீட் தேர்வுக்கான அறிவிப்பாணையை அதற்கேற்ற வகையில் வெளியிட அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை மருத்துவம் படிக்க ஆர்வமுள்ளவர்களுக்கு பெரிதும் பயனளிக்கும் என்றும், நாட்டில் மருத்துவக் கல்வியை வலுப்படுத்த உதவும் என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாணடவியா கூறியுள்ளார்.

பொது பிரிவினருக்கு 25 வயது, மற்ற இடஒதுக்கீடு பிரிவினருக்கு 30 வயது என்று நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அது நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts