பிந்திய செய்திகள்

30 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும், பேரறிவாளனுக்கு பிணைவழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முன்னாள் பிரதமர் 30 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும், பேரறிவாளனுக்கு நேற்று பிணை வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

.

பேரறிவாளன் ஏற்கனவே சிறைவிடுப்பில் இருந்தாலும் வெளியே செல்ல முடியாததால் பிணை வழங்கும்படி அதில் கோரப்பட்டிருந்தது.

எனினும், மத்திய அரசு தரப்பில் முன்னிலையான வழக்கறிஞர் பிணை வழங்க எதிர்ப்புத் தெரிவித்தார்.

எனினும், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனுக்கு பிணை வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளதால் பிணை வழங்கப்படுகிறது என்றும், ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் மாதந்தோறும் பேரறிவாளன் முன்னிலையாக வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறை விடுப்பில் இருந்தபோது பேரறிவாளன் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை என்பதையும் உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts