பிந்திய செய்திகள்

மருதாணியும் செக்கச் செவேலென அடர்த்தியாக உங்கள் கையில் சிவக்க இதை செய்யுங்கள்!!

நாம் அழகுக்காக பயன்படுத்தும் இயற்கை மருதாணியில் இருக்கும் மருத்துவ குணங்கள் எண்ணற்றவை. இதை கைகளில் வைத்துக் கொள்வதால் நம் உடல் உஷ்ணம் தணியும். குளிர்ச்சி பொருந்திய இந்த மருதாணி இலையை பறித்து சுத்தம் செய்து, நைசாக அரைத்து பெண்கள் கைகளில் இட்டுக் கொள்வது அந்தக்காலம் முதல் இந்தக்காலம் வரை மிகவும் விரும்பும் ஒரு செயலாகும்.

விசேஷம், பண்டிகை என்று வந்துவிட்டால் கைகளில் மருதாணி வைக்கும் பழக்கம் உண்டு! அப்படி வைக்கப்படும் மருதாணி எல்லோருடைய கைகளிலும் செக்கச் செவேலென சிவக்கிறதா? என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்ல முடியும். சிலருடைய கைகளில் பிரவுன் நிறத்தில் நன்றாக செக்கச்செவேலென சிவந்து இருக்கும். ஆனால் இன்னும் சிலருடைய கைகளில் ஆரஞ்சு வண்ணத்தில் அதிகம் சிவக்காமல் இருக்கும். இது ஒரு சில நாட்களில் மெல்ல மெல்ல மறைந்து போய்விடும். இப்படி மருதாணி ஆரஞ்சு வண்ணத்தில் இல்லாமல், ரத்த சிவப்பு நிறத்தில் நன்றாக சிவப்பதற்கு மருதாணி அரைக்கும் பொழுது இந்த சில பொருட்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.

மருதாணியை இப்படி பயன்படுத்தினால் இத்தனை நன்மைகளை அளிக்குமா? | Newlanka

மூன்று மாதத்திற்கு ஒரு முறையாவது பெண்கள் தங்களுடைய கைகளில் மருதாணி இட்டுக் கொள்வது வழக்கமாக வைத்திருக்க வேண்டும். மருதாணி இட்டுக் கொள்வதால் அவர்களுக்கு மனதிலிருக்கும் உளைச்சல் நீங்குவதாக குறிப்பிடப்படுகிறது. மனக்கவலை நீங்கி மகிழ்ச்சியுடன் இருப்பவர்கள் அதிகம் மருதாணியை இட்டுக் கொள்ள விரும்புகின்றனர். ஆயுர்வேதத்தை பொருத்தவரை ஒருவரின் கையில் வைக்கப்பட்ட மருதாணி அடர்ந்து கறுத்து போய்விட்டால், அது பித்தம் நிறைந்த உடம்பு என்று கூறுவார்கள். சரியாக சிவக்காமல் மஞ்சள் நிறத்தில் இருந்தால் சீதள உடம்பு என்று கூறுவார்கள்.

இது இரண்டுமே நல்லதல்ல! மருதாணி சரியான நிறத்தில் ஒருவருடைய கைகளில் சிவந்தால், அவர்களுக்கு இல்லற வாழ்க்கையிலும், குழந்தை பெறுவதிலும் பிரச்சினைகள் ஏற்படுவதில்லை என்கிறது ஆயுர்வேதம்.
ராமாயண சீதை இலங்கையில் அவதியுற்ற பொழுது மருதாணி செடி ஆறுதலாக இருந்தது என்று ஒரு புராணம் கூறுகிறது. இதனால் சீதை விடுதலை பெறும் பொழுது மருதாணி செடிக்கு வரம் கொடுத்ததாக கூறப்படுகிறது. அதன்படி மருதாணியை வீட்டில் வளர்ப்பவர்களும், அதனை பூஜிப்பவர்ககளும், கையில் பூசி கொள்பவர்களுக்கும் எவ்விதமான துன்பங்களும் அடைவதில்லையாம்.

மருதாணி - YouTube

அத்தகைய மருதாணி அரைக்கும் பொழுது சரியான விதத்தில் செக்க செவேலென சிவப்பதற்கு நீங்கள் முதலில் கொஞ்சம் கொஞ்சமாக மருதாணி இலைகளை மிக்ஸியில் போட்டு தண்ணீரை துளித்துளியாக தெளித்து அரைத்துக் கொள்ள வேண்டும். அரைக்கும் பொழுது அரை மூடி எலுமிச்சை பழச்சாற்றை பிழிந்து கொள்ளுங்கள். அதனுடன் ஓரிரு கிராம்புகளை போட்டு கொள்ளுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக இலைகளை சேர்த்து, கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கெட்டியாக அரைக்கும் பொழுது மருதாணி நல்ல சிவப்பாக சிவக்கும்.

புதிய மெஹந்தி டிசைன் தினமும் போட தயாரா | Maruthani Design 2022

மருதாணி அரைத்து முடித்த பின்பு கடைசியாக அரை டீஸ்பூன் வெள்ளை சர்க்கரையை சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். எலுமிச்சை சாறு, கிராம்பு, வெள்ளை சர்க்கரை சேர்த்த இந்த மருதாணி இட்டுக் கொள்வதால், அவர்களுக்கு எத்தகைய உடல் வாகு இருந்தாலும், நல்லதொரு நிறத்தில் சிவக்கும். வெறும் அழகுக்காக மட்டுமல்லாமல், மருதாணி பூசி கொள்பவர்களுக்கு நல்ல தூக்கமும், நகசுத்தி போன்ற பிரச்சனைகள் வராமலும் இருக்கும், அது மட்டுமல்லாமல் கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது.ஒருமுறை செய்து பாருங்கள்

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts