Home உலகம் இந்தியா இலங்கை படகு ஒன்று இந்தியாவில் கரையொதுங்கியுள்ளது

இலங்கை படகு ஒன்று இந்தியாவில் கரையொதுங்கியுள்ளது

0
இலங்கை படகு ஒன்று இந்தியாவில் கரையொதுங்கியுள்ளது

இந்தியாவில் நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து இரண்டு கிலோ மீற்றர் தொலைவில் காத்தான் ஓடை என்ற கடற்கரை பகுதியில் நேற்று இலங்கையைச் சேர்ந்த கண்ணாடி இழை படகு ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.

மீனவர்கள் வழங்கிய தகவல்களுக்கு அமைவாக கோடியக்கரை சுங்கத்துறை அதிகாரி கண்காணிப்பாளர் ஸ்டெல்லா மேரி உத்தரவின் பேரில் சுங்கத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று படகை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த படகு மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்த படகா? அல்லது கடத்தல் தொழிலுக்கு பயன்படுத்தப்படும் படகா ? இப் படகில் யாரும் வந்தனரா ? என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here