பிந்திய செய்திகள்

இந்தியாவில் முதலீடுகளை மேற்கொள்ள ஜப்பான் இணக்கம்

ஜப்பான் இந்தியாவில் முதலீடுகளை மேற்கொள்ள இணக்கம் தெரிவித்துள்ளது. இது குறித்த அறிவிப்புகளை அந்நாட்டின் பிரதமர் பிமியோ கிசிடா தெரிவித்துள்ளார்.

இதன்படி அடுத்த ஐந்து ஆண்டுகளில் 3 இலட்சத்து 19 ஆயிரம் கோடி ரூபாய் அளவில் ஜப்பான் முதலீடுகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து இருநாட்டு பிரதமர்களும் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். குறித்த அறிக்கையில், 2014ஆம் ஆண்டு அறிவித்தபடி இந்தியாவில் ஜப்பான் முதலீடு இரண்டரை இலட்சம் கோடி ரூபாயைத் தாண்டியுள்ளதாகப் பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்தார்.

அடுத்த ஐந்தாண்டுகளில் மின்சாரக் காருக்கான பேட்டரி தயாரிப்பு உள்ளிட்ட துறைகளில் ஜப்பானிய நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய உள்ளதாக ஜப்பான் பிரதமர் பூமியோ கிசிடா தெரிவித்துள்ளார்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts