பிந்திய செய்திகள்

நீரிழிவு நோயாளர்கள் காலில் புண்கள் ஏற்பட்டால் செய்ய வேண்டியவை

நீரிழிவு நோயாளர்களுக்கு காலிலும் பாதங்களிலும் ஏற்படும் காயங்கள், இலகுவில் கிருமித் தொற்றுக்கு உள்ளாகு கின்றன. சிலருக்கு இது மாறாப் புண் களை ஏற்படுத்துகின்றன. இன்னும் சிலருக்குசத்திர சிகிச்சை மூலம் அவயவ இழப்பு செய்யப்பட வேண்டிய பாரதூர மான நிலையையும் மற்றும் சிலருக்கு உயிரிழப்பு ஏற்படக்கூடிய பரிதாபநிலை யையும் ஏற்படுத்துகின்றன.

01.நீரிழிவு பாதிப்பினால் தசைகளில் ஏற்படும் வலிமை இழப்புக் காரணமாக, பாதங்களில் சாதாரணமாகக் காணப்படும் வளைவுத் தன்மைகள் சீரற்றுப் போகின்றன. இதனால் உடற்பாரமானது பாதங்களில் ஒழுங்கின்றிப் பரவி விழுகின்றது. இதுபாதத்தோல்களில் சிறிய காயங் களும் தோல் தடிப்பு (ஆணிக்கூடு போன்றவையும் ஏற்பட வழிவகுக் கின்றது.

02.நரம்புமண்டலத்தில் ஏற்படும் நீரிழிவு பாதிப்பு காரணமாக காலில் உள்ள தொடுகை உணர்ச்சி குறைவடை வதால் காலில் ஏற்படும் காயங்கள் நோ வலி என்பவை, இலகுவாக உணரப்படுவதுஇல்லை. இந்தநிலை மேலதிக கிருமித் தாக்கம் ஏற்படு வதற்கு ஏதுவாக அமைகின்றது.

03.நீரிழிவு நோயின் பாதிப்பின் ஒரு கட்டமாக காலுக்கும் பாதத்துக் கும் இரத்த வோட்டம் குறைவடைகிறது. இதனால் கால் பாதங்களில் உள்ள தோல் மற்றும் இழையங்களுக்கு போசணையும் நல் இரத்தமும் குறைவாகவே கிடைக்கிறது. இதனால் கிருமித் தாக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது.

எவ்வாறான நீரிழிவு நோயாளர் களுக்கு இவ்வாறான கால் புண்கள் வரச் சாத்தியங்கள் அதிகம்?

01.காலில் பாதத்தில் உணர்வுத்திறன் குறைவடைந்தவர்கள்.
02.காலில் குருதிச் சுற்றோட்டம் குறைவாக உள்ளவர்கள்
03.பாதங்களின் விரல்களின் வடிவமாற் றம் ஏற்பட்டவர்கள்.
04.சிறுநீரக கண் பாதிப்பு ஏற்பட்ட நீரிழிவு நோயாளர்கள்.
05.ஒரு முறை காலில் புண் வந்து மாறியவர்கள்.
06.கால் மற்றும் பராமரிப்பு குறைபாடு உள்ள நீரிழிவு நோயாளர்கள்.

காலில், பாதங்களில் ஏற்படும் புண்களைத் தவிர்க்க நீரிழிவு நோயாளிகள் செய்யக் கூடியவை

01.கால்களையும் பாதங்களையும் தினசரி அவதானித்து பராமரிக்க வேண்டும்.
02.ஏதாவது சிறு காயங்கள் மற்றும் மாற்றங்கள் பாதங்களில் ஏற்படின் உடனடியாக வைத்திய ஆலோசனை பெறுதல் வேண்டும்.
03.குருதியில் குளுக்கோசின் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.
04.குருதி அழுத்தம் கொலஸ்ரோல் அதிகமாதல் போன்றவற்றுக்கு மருத்துவ ஆலோசனையுடன் மருந்துகளைக் கையாள வேண்டும்.
05.புகைபிடிக்கும் பழக்கத்தைக் கைவிட வேண்டும்.

கால் புண்கள் ஏற்பட்டால் நீரிழிவு நோயாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

01.கைவைத்தியம் மற்றும் சுயவைத்தியம் செய்தல் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.
02.சிறிய காயம் எனினும், தகுதியான மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டும்.
03.காயங்களுக்கும் புண்களுக்கும் உரிய மருந்திட்டு பாதுகாப்பாகப் பராமரிக்க வேண்டும். கிருமித் தொற்றுக்கான மருந்துகளை வைத்திய ஆலோசனைப்படி கிரமமாக எடுக்க வேண்டும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts