பிந்திய செய்திகள்

இந்தியா நடப்பு நிதியாண்டில் முதன் முறையாக கோடி டொலரை தாண்டி சாதனை

இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவில், இந்தியா முதன்முறையாக நாற்பதாயிரம் கோடி டொலர் என்னும் ஏற்றுமதி இலக்கை எட்டியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இது இந்திய மதிப்பில் 30 இலட்சத்து 39 ஆயிரத்து 740 கோடி ரூபாயாகும். இந்தச் சாதனையை எட்டியமைக்கு பங்காற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.

உள்நாட்டில் பொருட்கள் தயாரித்துத் தன்னிறைவு பெறும் திட்டத்தில் இது குறிப்பிடத் தக்க மைல்கல்லாகும் எனக் குறிப்பிட்டுள்ள அவர், திட்டமிட்டுள்ளதற்கு 9 நாட்களுக்கு முன்பதாகவே இந்தச் சாதனை எட்டப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு நாளில் ஒரு பில்லியன் டொலர், ஒரு மாதத்தில் 33 பில்லியன் டொலர் என்னும் அளவில் ஏற்றுமதி இருந்ததாகக் குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, முந்தைய நிதியாண்டில் 29 ஆயிரத்து 200 கோடி டொலர் மதிப்பில் இருந்த ஏற்றுமதி, இந்த நிதியாண்டில் 37 விழுக்காடு அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts