Home உலகம் இந்தியா அறிமுகமான சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்சி

அறிமுகமான சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்சி

0
அறிமுகமான சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்சி

வருகிற 26-ந்தேதி15-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் தொடங்குகிறது. தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்சி இன்று அறிமுகம் செய்யப்பட்டது. இதனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி விஸ்வநாதன் அறிமுகப்படுத்தினார்.

ஐபிஎல் போட்டியில் 4 முறை கோப்பையை கைப்பற்றியதை குறிப்பதற்காக புதிய ஜெர்சியில் லோகோவுக்கு மேல் 4 நட்சத்திரம் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும் சிஎஸ்கே-வின் முதன்மை ஸ்பான்சரான TVS Eurogrip இரு மற்றும் மூன்று சக்கர டயர் பிராண்டின் லோகோவும் இடம்பெற்றுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்சி அறிமுகம் || Chennai Super Kings  unveils new jersey for IPL 2022

நமது ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும், ராணுவத்திடம் எங்கள் கேப்டனுக்கு உள்ள தொடர்பின் அடையாளமாகவும், கடந்த ஆண்டு ஜெர்சியில் ராணுவ சீருடையின் வண்ணத்தை அறிமுகப்படுத்தினோம். தற்போது ஜெர்சியின் பின்புறம் உள்ள காலரிலும் சேர்த்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார் இந்த ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகிய அணிகள் புதிய ஜெர்சியை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்க

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here