பிந்திய செய்திகள்

உயிரியல் பூங்காவில் சிகிச்சை பலனின்றி வெள்ளை புலி உயிரிழப்பு

நேற்றிரவு (23) 13 வயதுடைய ஆகான்ஷா என்ற பெண் வெள்ளை புலி உடல்நலகுறைவால் சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

கடந்த 2009ம் ஆண்டு இப்பூங்காவில் பிறந்த இந்த பெண் வெள்ளை புலி கடந்த இரண்டு வாரங்களாக ‘அட்டாக்சியா’ எனப்படும் கை, கால்களில் ஏற்படும் தசை சார்ந்த பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தது.

இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த புலி, கடந்த இரு தினங்களாக சரிவர உணவு உட்கொள்ளாமல் இருந்துள்ளது.
இதையடுத்து வெள்ளை புலியை காப்பாற்ற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி புலி உயிரிழந்தது. இதைத் தொடர்ந்து கால்நடை மருத்துவர்களால் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts