பிந்திய செய்திகள்

கோடையில் வியர்வை, துர்நாற்றத்தை கட்டுப்படுத்த வேண்டுமா அப்போ இதை செய்யுங்கள்

கோடை காலத்தில் நிலவும் வெப்பம், வறட்சி, ஈரப்பதம், சூரிய ஒளிக்கதிர்களின் ஆதிக்கம் ஆகியவை உடலில் அதிக வியர்வையை உண்டாக்குகின்றன. உடலில் துர்நாற்றம் வீசவும் கூடும். இந்த சிக்கலுக்கு தீர்வு காண உணவு பழக்கத்தில் சில மாற்றங்களை மேற்கொண்டாலே போதுமானது. வியர்வையைக் குறைக்கவும், உடல் துர்நாற்றத்தை கட்டுப்படுத்தவும் உதவும் சில உணவுப் பொருட்கள் உள்ளன.

  • போதுமான அளவு தண்ணீர் பருகுவது உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கவும், அதிகப்படியான வியர்வை காரணமாக ஏற்படும் நீரிழப்புகளில் இருந்து பாதுகாக்கவும் உதவும்.
  • ஓட்ஸ், முழு தானியங்கள் போன்ற நார்ச்சத்து நிறைந்த உணவுகள் செரிமானத்தை மேம்படுத்த உதவுகின்றன. உடலின் வெப்பநிலையை கட்டுக்குள் வைத்திருக்கவும், வியர்வையைக் குறைக்கவும் செரிமானம் உதவும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
  • சமையலுக்கு ஆலிவ் எண்ணெய்யை பயன்படுத்துவது வளர்சிதை மாற்றத்தையும், செரிமானத்தையும் அதிகரிக்க உதவும். ஆலிவ் ஆயிலில் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் அதிகம் இருப்பதால், அது உடலில் வெப்பநிலை அதிகரிப்பதை தடுக்கும். வியர்வையையும் கட்டுப்படுத்தும்.
  • ஆப்பிள், திராட்சை, தர்பூசணி, அன்னாசி மற்றும் ஆரஞ்சு போன்ற அதிக நீர் உள்ளடக்கம் கொண்ட பழங்கள் வியர்வை அளவை குறைக்க உதவும். மேலும் ஆரஞ்சு, எலுமிச்சை, அன்னாசி போன்ற சிட்ரஸ் பழங்களில் உள்ள இயற்கையான வாசனை உடலால் உறிஞ்சப்பட்டு, சருமத்திற்கு புதிய வாசனையை ஏற்படுத்தும்.
  • செலரி, வெள்ளரி, கீரை, சிவப்பு முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவற்றுள் நீர்ச்சத்து அதிகம் உள்ளடங்கி இருக்கும். வியர்வை அளவைக் கட்டுப்படுத்தவும் இவை உதவும்.
  • கோடை காலத்தில் கிரீன் டீ பருகுவது எதிர்மறையாக தோன்றலாம். ஆனால் கிரீன் டீயில் ஆன்டி ஆக்சிடன்ட் பண்புகள் நிறைந்துள்ளன. நரம்பு மண்டலத்தை குளிர்ச்சியாகவும், வியர்வையை கட்டுக்குள் வைத்திருக்கவும் அவை உதவும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts