பிந்திய செய்திகள்

இ- சைக்கிள் வாங்கும் முதல் 10 ஆயிரம் பேருக்கு மானியம்

டெல்லியில் இ- சைக்கிள் வாங்கும் முதல் 10 ஆயிரம் பேருக்கு ரூ.5,500 மானியம் வழங்கப்படும் என்றும் அதில் முதல் 1000 பேருக்கு ரூ.2000 கூடுதல் மானியம் வழங்கப்படும என்றும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

டெல்லியில் இ- சைக்கிள் வாங்கும் முதல் 10 ஆயிரம் பேருக்கு தலா ரூ. 5,500 மானியமாக வழங்கப்படும். இதில், முதல் ஆயிரம் பேருக்கு ரூ.2000 கூடுதலாக வழங்கப்படும்.

வர்த்தக பயன்பாட்டிற்கான கனரக சரக்கு இ- சைக்கிள்கள் மற்றும் மின் வண்டிகள் வாங்குவதற்கு மானியம் வழங்கப்படும். கார்கோ இ- சைக்கிள்களுக்கான மானியம் முதல் 5 ஆயிரம் பேருக்கு தலா ரூ.15 ஆயிரம் வழங்கப்படும். இந்த மானியம் முன்பு இ- கார்ட்களை தனிப்பட்ட முறையில் வாங்குபவர்களுக்கு வழங்கப்பட்டது.

இது தற்போது, இந்த வாகனங்களை வாங்கும் நிறுவனம் அல்லது கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ரூ.30 ஆயிரம் மானியமாக வழங்கப்படுகிறது.

மேலும், நகர சாலைகளில் தற்போது 45,900 இ- வாகனங்கள் இயங்கி வருகிறது. இதில் 36 சதவீதம் இருசக்கர வாகனங்கள். டெல்லியில் பதிவு செய்யப்பட்ட மொத்த வாகனங்களில் இ- வாகனங்களின் சதவீதம் 12 சதவீதமாக தாண்டியுள்ளது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts