பிந்திய செய்திகள்

ஹிந்தியை ஒருங்கிணைப்பு மொழியாக பயன்படுத்த வேண்டு மென்ற கருத்துக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

இந்தியாவில் ஆங்கிலத்திற்கு பதிலாக ஹிந்தியை ஒருங்கிணைப்பு மொழியாக பயன்படுத்த வேண்டுமென்ற கருத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

ஒற்றைமொழி என்பது ஒற்றுமைக்கு உதவாது என்றும் ஒருமைப்பாட்டையும் உருவாக்காது என்றும் தமிழக முதலமைச்சர் தெரிவித்தார்.

மேலும் இந்தியாவின் பன்முகத்தன்மையை கெடுக்கும் வேலையை பா.ஜ.க. தலைமை தொடர்ந்து செய்கிறது என்றும் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.

இவ்வாறான தவறுகளையே பா.ஜ.க. அரசாங்கம் தொடர்ந்தும் செய்கின்றது என குற்றம் சாட்டிய மு.க.ஸ்டாலின், இவ்வாறான முயற்சியில் ஒருபோதும் வெற்றிபெறமாட்டார்கள் என்றும் கூறினார்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts