பிந்திய செய்திகள்

இந்திய மத்திய அரசு இலங்கையில் உள்ள கச்சதீவை 99 வருட குத்தகைக்கு தருமாறு வலியுறுத்து

இந்திய மத்திய அரசு இலங்கை வசம் உள்ள கச்சதீவை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு பெற வேண்டும் என்று ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கோரிக்கை வைத்துள்ளார்.

தங்கச்சிமடம், ராமேஸ்வரம் மீனவர்களின் படகுகள் சேதமடைவது இலங்கை மீனவர்கள் சிறைபிடிப்பு தொடர் நிகழ்வாக உள்ளது என்றும் அவர் கூறினார்.

மேலும், இந்தியா கடந்த மூன்று மாதங்களில் 250 கோடி டொலர்களை இலங்கைக்கு கொடுத்துள்ளது. மேலும், 22,500 கோடி தேவையெனவும் அந்நாடு கேட்டுள்ளது. 140 கோடி டொலர்களை சீனா இலங்கையில் முதலீடு செய்துள்ளது. இதற்காக துறைமுகத்தின் 663 ஏக்கரில் 280 ஏக்கரை 99 ஆண்டுகளுக்கு குத்தகை விட இலங்கையிடன் சீனா கோரியுள்ளது. சீனாவை விட அதிகம் பணம் கொடுத்துள்ள மத்திய அரசு கச்ச தீவை 99 ஆண்டுகள் குத்தகைக்கு கேட்டுப் பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இலங்கையில் தற்போது பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு தமிழர்கள் வருவது அதிகரித்துள்ளது. தமிழக அரசு தொப்புள்கொடி உறவை இன்முகத்தோடு வரவேற்று அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்து வருவது பாராட்டுக்குரியது என்றும் ஜவாஹிருல்லா தெரிவித்தார்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts