பிந்திய செய்திகள்

இரு நாடுகளும் இணைந்து வறுமைக்கு எதிராக ஒன்றிணைந்து போராட முடியும்- பாகிஸ்தானின் புதிய பிரதமர் கோரிக்கை

பாகிஸ்தானின் புதிய பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் காஷ்மீர் பிரச்னைக்குத் தீர்வு காண பிரதமர் நரேந்திர மோடி முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

பாகிஸ்தான் பிரதமராக இருந்த இம்ரான் கானுக்கு எதிராக, எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதை அடுத்து, அவர் பதவி இழந்தார். இதையடுத்து, நேற்று முன்தினம் (11)கூடிய நாடாளுமன்றத்தில், புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதையடுத்து நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்திய அவர், இந்தியாவுடன் நல்லுறவு கொள்ளவே தாம் விரும்புவதாகக் குறிப்பிட்டார். காஷ்மீர் பிரச்னைக்குத் தீர்வு காண பிரதமர் நரேந்திர மோடி முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ள அவர், இதற்கு தீர்வு காணப்பட்டு விட்டால், இரு நாடுகளும் இணைந்து வறுமைக்கு எதிராக ஒன்றிணைந்து போராட முடியும் என்று தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அரசியலின் மற்றுமொரு முக்கிய திருப்பமாக, முன்னாள் பிரதமர் இம்ரான் கான், தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனிடையே, பாகிஸ்தான் அதிபர் ஆரிப் ஆல்விக்கு உடல் நிலை சரியில்லை என அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது. சில நாட்களுக்கு ஓய்வு எடுத்துக்கொள்ளுமாறு மருத்துவர்கள் அவரை கேட்டுக்கொண்டதாக பாகிஸ்தான் அதிபர் டுவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts