உலக வர்த்தக அமைப்பு அனுமதித்தால் உலகத்துக்கே உணவுப் பொருட்களை வழங்க இந்தியா தயாராக இருப்பதாக பிரதமர் மோடி கூறியதை அடுத்து இந்தியாவின் உணவு தானியங்கள் ஏற்றுமதியை உலகமே எதிர்பார்த்து இருப்பதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
உலகளாவிய சூழல்களால் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் உக்ரைன் போரால் விலைவாசி உயர்ந்து இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தானிய உற்பத்தியால் இந்தியா உணவுப் பொருள் ஏற்றுமதியை எதிர்நோக்குவதாகக் கூறிய பியூஷ் கோயல், கடந்த சில வாரங்களில் 20 முதல் 30 இலட்சம் தொன்கள் வரை கோதுமை ஏற்றுமதி செய்யப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.













































