பிந்திய செய்திகள்

இந்தியாவில் தஞ்சம் புகுந்த தமிழர்கள் தொடர்பில் இந்திய உயர்மட்டத்திற்கு கடிதம்!

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை காரணமாக வாழ்வை இழந்து தமிழகத்தில் தஞ்சம் புகுந்துள்ள இலங்கை தமிழ் மக்களுக்கு உதவ வேண்டுமென, தமிழக மக்களவை உறுப்பினர் எஸ்.வெங்கடேசன் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, வேலையின்மை மற்றும் உச்சத்தை தொட்டுள்ள பணவீக்கம் காரணமாக இலங்கை தமிழ் மக்கள் தமிழகத்தின் தனுஷ்கோடி அரிச்சல் முனைக்கு வருகை தந்துள்ளதாக தமிழக மக்களவை உறுப்பினர் எஸ்.வெங்கடேசன் குறிப்பிட்டுள்ளார்.

நாளாந்தம் இந்த எண்ணிக்கை அதிகரிப்பதாக செய்திகள் வெளிவருவதாக, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் தஞ்சம் புகும் மக்களுக்கு தங்குமிடம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை உடனடியாக உறுதி செய்யவேண்டுமெனவும், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இதற்கு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்வாரென தான் நம்புவதாகவும் தமிழக மக்களவை உறுப்பினர் எஸ்.வெங்கடேசன் குறிப்பிட்டுள்ளார்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts