பிந்திய செய்திகள்

3.7 அடி மனிதனுக்கு கிடைத்த அதிஷ்டம்!

மத்திய பிரதேசம் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரால் உயரம் குறைந்த இளைஞருக்கு 35 நிறுவனங்களில் இருந்து வேலைக்கு அழைப்பு கிடைத்துள்ளது.

மத்திய பிரதேசம் மாநிலம் குவாலியரை பகுதியை சேர்ந்த அங்கேஷ் கோஷ்தி, 3.7 அடி உயரம் கொண்டவர். இதனால், குழந்தை பருவத்தில் இருந்தே இவா் கேலி, கிண்டலுக்கு உள்ளானர்.

இதை மீறி, அவர் பட்டப் படிப்பை முடித்து, 2020-லிருந்து வேலை தேடி அலைந்து வந்தார்.

இந்நிலையில், அவரது உயரம் காரணமாக எங்குமே அவருக்கு வேலை கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனையடுத்து அங்கேஷ் கோஷ்தி பற்றி அறிந்த குவாலியர் தெற்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினா் பிரவின் பதாக், அங்கேஷ் பற்றி ‘வீடியோ’ எடுத்து, சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.

அந்த வீடியோவை பார்த்த பலா் அங்கேஷ் கோஷ்திக்கு வேலை தர பல 35 நிறுவனங்கள் முன் வந்துள்ளனா்.

இதனால், அங்கேஷ் மட்டுமின்றி அவரது பெற்றோரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts