பிந்திய செய்திகள்

உலக சாதனை- கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றது இந்தியா

பீகாரின் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள தலார் மைதானத்தில் கடந்த 23-ம் தேதி வீர் குன்வர் சிங் விஜயோத்சவ் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சயில் ஒரே நேரத்தில் 78,220 தேசியக் கொடிகளை அசைத்து இந்தியா தனது பெயரை கின்னஸ் புத்தகத்தில் பதிவு செய்து வரலாறு படைத்துள்ளது.

India Creates Guinness Record for Simultaneous Waving of More than 78,000  National Flags

இந்த வரலாற்று நிகழ்வின்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உடனிருந்தார். இந்த முயற்சியை கின்னஸ் உலக சாதனை புத்தகத்தின் பிரதிநிதிகள் நேரில் பார்த்தனர்.

இதுகுறித்து மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் கூறியதாவது சிறந்த சுதந்திரப் போராட்ட வீரர் பாபு வீர் குன்வர் சிங்கின் பிறந்தநாளின்போது ஜகதீஷ்பூரில் இந்திய தேசியக் கொடி ஐந்து நிமிடங்களுக்கு அசைக்கப்பட்டது. இதன் மூலம் ஆசாதி கா அம்ரித் மஹோத்சங் கொண்டாடப்பட்டது.

India enters Guinness Book of World Records for waving over 78,000 national  flags simultaneously

நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் 78,220 பேர் தேசியக் கொடியை அசைத்தனர். தேசியக் கொடிகளை அமைப்பதில் இது புதிய உலக சாதனையாகும். பீகார் மக்கள் தானாக முன்வந்து ஒரே இடத்தில் இவ்வளவு பெரிய கொடிகளை அசைத்தது பாராட்டுக்குரியது.

இதற்கு முன்னதாக, லாகூரில் நடந்த நிகழ்வில் 56 ஆயிரம் பாகிஸ்தானியர்கள் தங்கள் தேசியக் கொடியை அசைத்து 18 ஆண்டுகளுக்கு முன்பு உலக சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts