Home உலகம் இந்தியா 90 கிலோ மீட்டர் தூரம் இறந்த மகனனின் உடலை பைக்கில் கொண்டு சென்ற தந்தை

90 கிலோ மீட்டர் தூரம் இறந்த மகனனின் உடலை பைக்கில் கொண்டு சென்ற தந்தை

0
90 கிலோ மீட்டர் தூரம் இறந்த மகனனின் உடலை பைக்கில் கொண்டு சென்ற தந்தை

ஆம்புலன்ஸுக்கு கொடுக்க பணமில்லாததால் 90 கிலோ மீட்டர் தூரம் தனது மகனின் உடலை தந்தை பைக்கில் கொண்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆம்புலன்சில் செல்ல பணம் இல்லை; 90 கி.மீ தூரம் மகனின் உடலை பைக்கில்  கொண்டுசென்ற தந்தை - ஜே.வி.பி நியூஸ்

இந்தியா ஆந்திர மாநிலம் ராஜம்பேட்டை மாவட்டம் பெத்வேல் கிராமத்தை சேர்ந்தவர் நரசிம்மலு. இவரது மகன் ஜெசேவா (வயது 10). இவரது சிறுநீரகம் பாதிக்கப்பட்டதால் திருப்பதி ரூயா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

இன்று அதிகாலை ஜெசேவா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். தனது மகன் உடலை ஆஸ்பத்திரியிலிருந்து தனது சொந்த ஊருக்கு கொண்டு செல்ல தனியார் ஆம்புலன்சை அணுகினார்.

மகனின் சடலத்துடன் இரவில் 90 கிமீ பைக்கில் பயணம் செய்த தந்தை: கண்கலங்க  வைக்கும் வீடியோ

ஆம்புலன்ஸ் டிரைவர்கள் சிறுவனின் உடலை எடுத்துச் செல்ல அதிக அளவு பணம் கேட்டதாக கூறப்படுகிறது. அந்த அளவிற்கு அவரிடம் பணம் இல்லை. இதனால் ஆத்திரம் அடைந்த நரசிம்மலு தனது மகனின் உடலை பைக்கில் கொண்டு செல்ல முடிவு செய்தார்.

Viral Video Shows Father Carrying Dead Son on Bike in Andhra Pradesh;  Chandrababu Naidu Slams State Administration || ஆம்புலன்சில் கொண்டு செல்ல  பண வசதி இல்லை : இறந்த சிறுவன் உடலை 90 கி.மீ ...

இதையடுத்து உறவினர் ஒருவரை பைக் எடுத்து வர கூறி அந்த பைக்கில் சிறுவனின் பிணத்தை எடுத்துச் சென்றனர். திருப்பதியில் இருந்து பெத்வேல் கிராமம் சுமார் 90 கிலோ மீட்டர் தூரம் உள்ளது.

அந்த தூரத்திற்கு மகனின் உடலை பைக்கில் கொண்டு சென்றார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here