பிந்திய செய்திகள்

தேர் திருவிழாவில் நடந்த துயரம்; 12 பேர் உயிரிழப்பு ..!

தமிழகம் – தஞ்சை அருகே தேரோட்டத்தின் போது மின்சார கம்பியில் தேர் உரசியதில் மின்சாரம் பாய்ந்து ஏற்பட்ட விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

தஞ்சாவூரில் களிமேடு பகுதியில் உள்ள அப்பர் கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக நேற்று இரவு தேர் பவனி நடைபெற்றது. தேர் மீது மின்சார கம்பி உராய்ந்ததில் மின்சாரம் பாய்ந்தது. இதில் பலர் தூக்கி வீசப்பட்டனர்.

தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்பு படையினர் போராடி தீப்பற்றி எரிந்த தேரை போராடி அணைத்தனர். இதில் தேர் முற்றிலும் எரிந்து போனது.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 12 பேர் பரிதாபமாக பலியாகினர்.

10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 10க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களில் மேலும் 2 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts