பிந்திய செய்திகள்

15,500 அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்கள் இலங்கைக்கு நன்கொடை

இலங்கைக்கு நன்கொடையாக இந்திய அரசாங்கம் 15,500 அமெரிக்க டொலர் பெறுமதியான மருந்துப் பொருட்களை வழங்கியுள்ளது.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே அவர்களினால் கொழும்பு துறைமுகத்தில் வைத்து சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமணவிடம் இந்த மருந்துத் தொகுதி கையளிக்கப்பட்டது.

இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பல் மூலம் 95 அத்தியாவசிய மருந்துகள் தொகை நன்கொடையாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது.

இலங்கையில் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள இச்சந்தர்ப்பத்தில் இந்தியா வழங்கிய ஆதரவிற்கு தனது நன்றியை தெரிவித்துள்ள சுகாதார அமைச்சர், ஒவ்வொரு இக்கட்டான தருணத்திலும் அண்டைய நாடாக இந்தியா வழங்கும் ஆதரவிற்கு நன்றி தெரிவித்தார்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts