Home Blog Page 14

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன், தங்கை மரணம்

குடும்ப வன்முறை தீவிரமடைந்தமையினால் நவகத்தேகம முல்லேகம பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரனும் சகோதரியும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த அண்ணன், தங்கை கொடூரமாக கொலை கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக மனைவியின் மூத்த சகோதரர் வந்துள்ளார், அங்கு கணவன் அவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார்.

அதே நேரத்தில் அவரது மனைவியும் அடித்துக் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.ஒரே குடும்பத்தை சேர்ந்த அண்ணன், தங்கை கொடூரமாக கொலை அண்ணனும் 32 வயதுடைய ஒருவரும் அவரது 25 வயது சகோதரியும் இந்த சம்பவத்தில் கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் காயமடைந்த நிலையில் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு காவல்துறை பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இலங்கையில் புதிய விசா திட்டம் ஆரம்பம்

பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காண வெளிநாட்டவர்கள் முதலீடு செய்யும் வகையில் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நீண்ட கால விசா திட்டமான கோல்டன் பரடைஸ் விசா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வெளிநாட்டவர்கள் முதலீடுகளை மேற்கொள்ளுதல், வசித்தல் மற்றும் கல்விகற்றல் ஆகியவற்றிற்கு வசதியாக வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கான நீண்ட கால விசா திட்டமான ‘கோல்டன் பரடைஸ் விசா திட்டத்தின்’ அங்குரார்ப்பண விழா இன்று இடம்பெற்றது.

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன ஆகியோர் தலைமையில் பத்தரமுல்லையிலுள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் இடம்பெற்றது.

வெளிநாட்டவர்களுக்காக இலங்கையில் புதிய திட்டம்
அங்குரார்ப்பணம்

இதன்போது கோல்டன் பரடைஸ் வதிவிட விசா திட்டத்திற்கான உத்தியோகபூர்வ இணையதளமும் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

செயல்முறைகள் எளிமையாக அமையும்போது, கோல்டன் பரடைஸ் விசாவிற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களை கவரும் எனவும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறை சிக்கலற்றதாக இருக்கும்போது, அது மேலும் நம்பிக்கைக்குரியதாக அமையும் எனவும் பாதுகாப்பு செயலர் குறிப்பிட்டார்.

இந்த திட்டத்தின் மூலம் முதலீட்டாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் தொடர்ச்சியான நன்மைகளை அனுபவிப்பார்கள் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

கோல்டன் பரடைஸ் வதிவிட விசா திட்டமாது முதலீட்டாளர்கள் இலங்கை தீவின் நன்மைகளை அனுபவிக்கும் அதேவேளையில், வளர்ந்துவரும் பொருளாதாரத்திற்கு பங்களித்து பலன்களைப் பெறுவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட நீண்ட கால திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை எரிசக்தி அமைச்சரை சந்தித்த இலங்கைக்கான நியுசிலாந்து உயர்ஸ்தானிகர்!

இலங்கைக்கான நியுசிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கல் எப்பல்டனுடன் இலங்கையில் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி துறையை மேம்மடுத்துவதற்கான உடனடி மற்றும் நீண்ட கால வேலைத்திட்டங்கள் தொடர்பில் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கலந்துரையாடியுள்ளார்.

இச் சந்திப்பானது நேற்றையதினம் (30-05-2022) வலுசக்தி அமைச்சில் இடம்பெற்றது.

இதன்போதே இவ்விடயம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் அமைச்சர் காஞ்சன விஜேசேகர, நியூசிலாந்துக்கான உயர்ஸ்தானிகருடன் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சில் சந்திப்பொன்று இடம்பெற்றதாக பதிவிட்டுள்ளார்.

https://twitter.com/kanchana_wij/status/1531189623031877633?

அற்புத பயனுள்ள மூலிகை துத்திக்கீரை!

துத்திக் கீரைகளை நன்கு சுத்தமாகக் கழுவி, அதனுடன் பாசிப்பருப்பு சேர்த்து சமைத்து சாதத்துடன் கலந்து சிறிது நெய்சேர்த்து சாப்பிட்டு வந்தால் நாட்பட்ட மலச்சிக்கல் தீரும்.

முகப்பருக்கள் ஏற்படுவதால் முகத்தின் அழகு கெட்டு விடுகிறது இப்படிப்பட்டவர்கள் துத்தி செடி வேரின் மேல்பட்டையை நன்றாக அரைத்து, நல்லெண்ணெயில் கலந்து, நன்றாகக் காய்ச்சி வடித்து வைத்துக் கொண்டு முகப்பருக்களின் மீது தடவினால் முகப்பருக்கள் நீங்கி விடும்.

மூல நோய்க்கு சிறந்த மூலிகை மருந்தாக துத்தி இருக்கிறது. துத்தி இலைகளை நிழலில் காயவைத்து, பொடி செய்து வைத்துக் கொண்டு, அப்பொடியைக் காலை மாலை இருவேளை ஒரு தேக்கரண்டித் தூளைச் சாப்பிட்டு, சுடு தண்ணீர் குடித்து வந்தால் மூலம், ரத்த மூலம், உள் மூலம், மூலப் புண்கள், மூலக் கடுப்பு மற்றும் நமைச்சல் முதலிய மூலம் சம்பந்தமானஅனைத்து பிணிகளும் அகலும்.

துத்தி இலைகளை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரில் வாய் கொப்பளித்து வந்தால் பல் ஈறுகளில் ஏற்படும் வலி, வீக்கம் மற்றும் இதர நோய்கள் தீரும்.

ஒரு சிலர் தண்ணீர் குறைவாக அருந்துவதாலும், அதீத உடல் வெப்பத்தாலும் சிறுநீர் கழிப்பதில் பிரச்சினைகள் ஏற்படுகிறது. சரியாக சிறுநீர் பிரியாமல் இருந்தால் எதிர்காலங்களில் சிறுநீரக நோய் வர வாய்ப்புள்ளது. துத்தியிலையை இரசம் செய்து அருந்தி வந்தால் நீர் நன்கு பிரியும். சிறுநீரக நோய் வராது.

சுவையான வேப்பம்பூ துவையல்!

தேவையான பொருட்கள்:

வேப்பம்பூ
நெல்லிக்காய் அளவு புளி
4வரமிளகாய்
1 தேக்கரண்டி உளுத்தம்பருப்பு
சிறிது பெருங்காயம்
தேவையான அளவு உப்பு
2 ஸ்பூன் நல்லெண்ணை

செய்முறை:

வாணலியில் சிறிது நல்லெண்ணெய் சேர்த்து வேப்பம்பூ, புளி, வர மிளகாய், உளுத்தம்பருப்பு ஆகியவற்றை தனித் தனியாக வறுத்துக் கொள்ளவும்.

அனைத்தையும் ஒன்றாக சேர்த்து அரைத்துகொள்ளவும்.

தேவைபட்டால் இதனுடன் கடுகு, உளுந்து, வரமிளகாய் தாளித்து சேர்த்துக் கொள்ளலாம்.

சுவையான ஆரோக்கியமான வேப்பம்பூ துவையல் தயார். இதை சுடுசாதம் அல்லது இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிடலாம்.

மூ‌ன்றா‌ம் ‌பிறையின் ‌சிற‌ப்பு எ‌ன்ன?

முற்பிறவி பாவத்தைப் போக்கும் என்பார்கள். சூரியனும், சந்திரனும் ஒரே ராசியில் இணைவது அமாவாசை திதியாகும். ஒவ்வொரு அமாவாசைக்கு பிறகு வரும் மூன்றாம் நாள், மூன்றாம் பிறை நாளாகும். அமாவாசைக்கு மறுநாள் நிலவு தெரிவதில்லை.

ஆனால் மூன்றாம் நாளான துவிதியை திதியில் தெரியும் நிலவு, அழகாகவும், பிரகாசமாகவும் இருக்கும். மூன்றாம் பிறையானது இரவு வருவதற்கு முன்னே 6.30 மணியளவில் தோன்றும் பிறையாகும்.

சிவன், பார்வதி, விநாயகப் பெருமான் போன்ற தெய்வங்கள் சூடும் இந்தப் பிறை தெய்வீக சின்னமாகும். காமம், வெகுளி, மயக்கம் இந்த மூன்று குணங்களையும் கடந்தவன் முக்தி அடையலாம் என்பதை நினைவுபடுத்துவதற்கே பெரியவர்கள் இதைக் காணவேண்டும் என்று கூறினார்கள்.

மூன்றாம் பிறையை பார்த்தல் மனநிறைவும், பேரானந்தமும், மன அமைதியும் கிடைக்கும். மனக்கஷ்டங்கள், வருத்தங்கள் எல்லாமே நீங்கும்.

மூன்றாம்பிறை பிறந்த கதை

ஒரு முறை தட்சனின் சாபத்தால், தனது பதினாறு கலைகளையும் இழந்தான் சந்திரன். தனது கலைகளை மீண்டும் பெறுவதற்காக சந்திரன் சிவனை நினைத்து தியானம் செய்தார். தட்சனின் சாபத்தால் உருகும் சந்திர பகவானின் தேக நிலை குறித்து மிகவும் வருத்தம் அடைந்தனர் அவரின் இருபத்தேழு நட்சத்திர மனைவியர். உடனே தங்களின் தந்தையான தட்சனிடம் சென்று சாப விமோசனம் அளிக்கும்படி வேண்டினர்.

தட்சனோ தனது அறியாமையால், அளித்த சாபத்தால் தனது புண்ணியம் அனைத்தும் குறைந்துவிட்டது என்றும், தன்னால் சாப விமோசனம் அளிக்க முடியாது என்றும் கூறினார். இறுதியில் 27 நட்சத்திர மனைவியரும் சந்திரனும் சிவ பெருமானை நினைத்து தவம்புரிந்தனர். சந்திரனின் தவத்தை மெச்சிய சிவபெருமான் தன் தலைமுடியில், ‘மூன்றாம் பிறையாக’ அமரும் பேறு அருளினார்.

மூன்றாம் பிறை வணங்குவதால் ஏற்படும் நன்மைகள்

சந்திரனை தரிசிக்கும் வேளையில், கையில் காசை வைத்து மூடிக்கொண்டு வலமாக மூன்று முறை சுற்றி, மீண்டும் ஒரு முறை பிறையை தரிசித்து வணங்க, பெண்களுக்கு மாங்கல்ய பலம் ஏற்படுகிறது.மூன்றாம் நாளில் சந்திர தரிசனம் காண்பவர்களுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும். மனக்குழப்பம் நீங்கும். கண் பார்வை தெளிவாகும். மூன்றாம் பிறையில் சந்திர தரிசனம் செய்து வணங்குவது ஆயுளை விருத்தியாக்கும், செல்வங்க ளைச் சேர்க்கும், பிரம்மஹத்தி போன்ற தோஷங்க ளை நீக்கும். அதுவும், திங்கட்கிழமையன்று (சோமவாரத்தில்) வரும் மூன்றாம் பிறையை நீங்கள் பார்த்துவிட்டால், வருடம் முழுக்க நீங்கள் சந்திரனை வணங்கிய பலன்கள் எல்லாம் கிடைக்கும்.

அனைத்து மதங்களும் போற்றும் மூன்றாம் பிறை

மூன்றாம் பிறையை சிறப்பை இன்னும் சொல்வதெ ன்றால் அனைத்து மதங்களுமே இதை ஏற்றுகொ ண்டுள்ளன.அதாவது இஸ்லாம் மத‌ம், ஜைன‌ம், கிறித்தவம், இந்து மத‌ம் என்று எல்லா மதங்களும் மூன்றாம்பிறை என்பது தெய்வீக அம்சம் பொருந்தியது என தெரிவிக்கிறது . அந்த பிறையைகண்டு வணங்குவது ஆயுளை விருத்தி செய்யும் , செல்வ ங்களை சேர்க்கும், பிரம்மஹத்தி தோஷம் போன்ற தோஷங்களை நீக்கும். மூன்றாம் பிறைச்சந்திரனை தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் தரிசிப்பதால் மனதில் உள்ள கல்மஷங்கள் பாபங்கள் குழப்பங்கள் விலகி மன நிம்மதியும் , தெளிவான ஞானமும் ஆரோக்கியமும், தம்பதிகளுக்குள் ஒற்றுமையும் ஏற்படும்.

பிறை பார்ப்பதன் புண்ணியம்

வைகை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தோடுகிறது. ஊர்மக்கள் அவரவர் பங்காக மணலைக் கொட்டி, உடையும் கரையை அடைத்தார்கள்.மதுரை மாநகரில் பிட்டு விற்று வாழ்ந்து வந்த மூதாட்டியின் பங்கினை அடைக்க யாருமில்லை. அவள் தினமும் வழிபடும் சொக்கநாதப் பெருமானை நினைத்து வருந்தினாள்.அவளது உண்மையான அன்பிற்கு செவி சாய்த்த இறைவர், தாமே கூலி ஆளாக வந்து அவள் பங்கிற்கு வேலை செய்தார் என்பது திருவிலையாடற்புராணம் கூறும் செய்தியாகும்.

கிழவியின் பங்கினை அடைக்க சிவபெருமானே கூலி ஆளாக வரவேண்டுமா? அப்பெருமான் தன்னிடம் உள்ள பூதக்கணங்களில் ஒன்றை அனுப்பி இருந்தாலே போதுமே! அப்பெருமானே ஆளாக வரும் அளவிற்கு அந்த மூதாட்டியின் தகுதி என்ன என்பது பற்றி சிந்திப்போம்.

திருவிளையாடற் புராணத்தை அருளிய பரஞ்சோதி முனிவர் திங்கள் ஆயிரம் தொழுதாள் என்று கூறுகின்றார். ஆயிரம் பிறையைத் தரிசித்த மேலான புண்ணியம் தான் அவள் பெற்றிருந்த தகுதியாகும்.

பிறையைப் பார்த்து வணங்குவது என்பது மிக மேலான சிவபுண்ணியம் ஆகும். பிறை, சிவபெருமான் திருமுடிமேல் இருப்பதல்லவா? பிறையை தரிசிக்கும் பொழுது பிறையணிந்த பெருமானை அல்லவா நாம் தரிசிக்கின்றோம்.
பிறையை தொடர்ந்து வணங்குவதால் அளவிட முடியாத புண்ணியத்தை பெறலாம். இன்று முதல் அனைவரும் பிறையை வணங்கும் உயர்ந்த வழக்கத்தை மேற்கொள்வார்களாக!

பிறை பார்க்கும் பயன்

மூன்று பிறை தொடர்ந்து தரிசித்தால் மூர்க்கனும் அறிவு பெறுவான்.

நான்கு பிறை தொடர்ந்து தரிசித்தால் நம்வினை நாசமாகும்.

ஐந்து பிறை தொடர்ந்து தரிசித்தால் ஆண்டியும் அரசயோகம் பெறுவான்.

ஆறு பிறை தொடர்ந்து தரிசித்தால் திருமணம் தடையின்றி நடக்கும்.

ஏழு பிறை தொடர்ந்து தரிசித்தால் ஏற்பட்ட கடன் தீரும்.

பத்து பிறை தொடர்ந்து தரிசித்தால் பாரில் புகழ் ஓங்கும்.

வருடம் முழுவதும் பிறை தொடர்ந்து தரிசிக்க வம்ச விருத்தியாகும்.

நீடித்த பிறை தரிசனம் நீடுலக வாழ்வு தரும் ( முத்திப்பேறு )

மூன்றாம் பிறையைத் தரிசனம் செய்தால், சிவனின் சிரசையே நேரில் தரிசனம் செய்ததாக அர்த்தம். தொடர்ந்து மூன்றாம் பிறையை தரித்து வருபவர்கள் வாழ்வில் வற்றாத செல்வ வளத்தை பெற்று பிரகாசத்துடன் திகழ்வர்.

இன்றைய நாளுக்கான ராசி பலன் (31-05-2022)

மேஷம் :

அசுவினி: வேலையின் காரணமாக வெளியூர் பயணம் செல்வீர்கள். பொன் பொருள் வரவு உண்டாகும்.
பரணி: புதிய நட்புகளால் அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த வரவுகள் வந்து சேரும்.
கார்த்திகை 1: அரசு வழியில் முயற்சிகள் இழுபறியாகும். திடீர் வரவால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

ரிஷபம் :

கார்த்திகை 2, 3, 4: செயல்களில் தடுமாற்றம் ஏற்பட்டாலும் முடிவில் மகிழ்ச்சியான நிலையை அடைவீர்கள்.
ரோகிணி: தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள புதிய வழிமுறைகளைக் கையாள்வீர்கள். எதிரிகள் விலகுவர்.
மிருகசீரிடம் 1, 2: எதிர்பாராத தடைகளால் செயலில் இழுபறி உண்டாகும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: ஒரு பக்கம் செலவு அதிகரித்தாலும் மறுபக்கம் தேவைக்கேற்ற வருமானம் வந்து சேரும்.
திருவாதிரை: புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். திடீர் செலவுகள் ஏற்படலாம் விழிப்புடன் செயல்படுங்கள்.
புனர்பூசம் 1, 2, 3: மனதிற்கினிய சம்பவம் ஒன்று நடைபெறும். எதிர்பாலினரால் ஆதாயம் அடைவீர்கள்.

கடகம்:

புனர்பூசம் 1, 2, 3: நீண்டநாள் எண்ணம் ஒன்று நிறைவேறும். அரசு வழியில் ஆதாயம் உண்டாகும்.
பூசம்: வெளி வட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். விஐபிகளின் ஆதரவால் உங்கள் எண்ணம் ஈடேறும்.
ஆயில்யம் தொழிலில் இருந்த தடைகளை சரி செய்வீர்கள். எதிர்பாராத வரவால் மகிழ்ச்சி அடைவீர்கள்.

சிம்மம் :

மகம்: அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். லாபம் அதிகரிக்கும். விருப்பம் நிறைவேறும்.
பூரம்: எதிர்பார்த்த வரவுகள் உங்கள் கைக்கு வரும். அரசாங்க வேலைகள் இன்று நிறைவேறும்.
உத்திரம் 1: முயற்சியில் ஆதாயம் உண்டாகும். பிரபலங்களின் மூலம் சில வேலைகளை முடிப்பீர்கள்.

கன்னி :

உத்திரம் 2, 3, 4: திட்டமிட்ட வேலை நடந்தேறும். குடும்பத்தில் குழப்பம் தோன்றி உங்களை சங்கடப்படுத்தும்.
அஸ்தம்: வேலையில் தடை உண்டானாலும் இறுதியில் உங்கள் முயற்சி வெற்றியாகும்.
சித்திரை 1, 2: எதிர்பாராத தடைகளை சந்திப்பீர்கள். பெரியவர்களின் ஆதரவால் நன்மை காண்பீ்ர்கள்.

துலாம் :

சித்திரை 3, 4: சட்டத்திற்கு புறம்பான செயலால் சங்கடம் அடைவீர்கள். தீயவர்களை விட்டு விலகுவது நல்லது.
சுவாதி: யோசிக்காமல் எதிலும் ஈடுபட வேண்டாம். உங்களுடைய முயற்சிகள் இன்று இழுபறியாகும்.
விசாகம் 1, 2, 3: எதிர்பாராத பிரச்னைகள் தேடிவரும். உங்கள் எண்ணம் நிறைவேறாமல் தாமதம் ஏற்படும்.

விருச்சிகம் :

விசாகம் 4: எதிர்பாராத இடத்தில் இருந்து பணம் வரும். பொன் பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
அனுஷம்: குடும்பத்தில் செல்வாக்கு உயரும். மற்றவர்களின் உதவியின்றி நினைத்ததை சாதிப்பீர்கள்.
கேட்டை: முயற்சிக்கேற்ற லாபத்தை அடைவீர்கள். கணவன் மனைவி உறவில் இருந்த பிரச்னை விலகும்.

தனுசு :

மூலம்: நினைத்ததை சாதிப்பீர்கள். உங்களுடைய செல்வாக்கு உயரும். யோகமான நாள்.
பூராடம்: எதிரிகள் விலகிச் செல்வர். திட்டமிட்டு செயல்பட்டு முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.
உத்திராடம் 1: உற்சாகம் அதிகரிக்கும். எதிர்பார்த்த ஒரு செய்தி இன்று உங்களை வந்து சேரும்.

மகரம் :

உத்திராடம் 2, 3, 4: முயற்சியில் பின்னடைவு ஏற்படும். பிள்ளைகளால் சங்கடங்களை அடைவீர்கள்.
திருவோணம்: பூர்வீக சொத்தில் இருந்த பிரச்னைகள் மீண்டும் தலை எடுக்கும். அலைச்சல் அதிகரிக்கும்.
அவிட்டம் 1, 2: உங்களுடைய செயல்கள் இன்று இழுபறியாகும். நினைத்ததை சாதிக்க முடியாமல் போகும்.

கும்பம் :

அவிட்டம் 3, 4: தாய்வழி உறவினர் ஆதரவுடன் செயல்படுவர். கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.
சதயம்: கடும்முயற்சிக்குப்பின் உங்களின் எண்ணம் நிறைவேறும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.
பூரட்டாதி 1, 2, 3: தொழில் ரீதியாக புதிய முயற்சியில் ஈடுபடுவீர்கள். பெரியவர்களின் ஆதரவு கிடைக்கும்.

மீனம் :

பூரட்டாதி 4: நீண்டநாள் பிரச்னை ஒன்று முடிவிற்கு வரும். ஈடுபடும் செயல்களில் வெற்றி காண்பீர்கள்.
உத்திரட்டாதி: துணிவுடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். சகோதரர் வழியில் உதவி கிடைக்கும்.
ரேவதி: இன்று உங்களுடைய ஆற்றல் வெளிப்படும். நிதானமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள்.

பாக்குத்தெண்டலுடன் ஆரம்பான வற்றாப்பளை கண்ணகி அம்மன் வருடாந்த உட்சவம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உட்சவம் இன்று (30.05.2022) அதிகாலை பாக்குத்தெண்டலுடன் ஆரம்பமாகியுள்ளது

குறிப்பாக நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கம் காரணமாக இரண்டு வருடங்கள் பக்தர்கள் ஆலயத்துக்கு வருகின்ற நிகழ்வானது தடை செய்யப்பட்டு ஆலய நிவர்வாகத்தினர் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் ஆலய சம்பிரதாய கிரிகைகளை நடாத்த அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் இம்முறை கட்டுப்பாடுகள் அற்ற நிலையில் ஆலய கிரிகைகள் சிறப்புற ஆரம்பமாகியுள்ளது

அந்தவகையில் வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உட்சவத்தின் ஆர்ம்ப நிகழ்வாக இடம்பெறும் பாக்குத்தெண்டல் உட்சவம் இன்று (30-05-2022) அதிகாலை வேளையில் இடம்பெற்றது

முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயத்தில் இன்று அதிகாலை 2 மணிக்கு இடம்பெற்ற வழிபாடுகளை தொடர்ந்து வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோவிலுடன் நீண்ட தொடர்பை பேணி வந்த குடியானவர்களுக்கு மரவு வழியாக அறிவிப்பதற்காக அவர்களது வீடுகளுக்கு சென்று பாக்குத்தெண்டல் இடம்பெற்றது

கண்ணகி தெய்வத்தின் பக்தனாகிய பக்தஞானி தென்னிந்தியாவில் இருந்து முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை கிராமத்தில் தங்கியிருந்த காலத்தில் வற்றாப்பளை பொங்கல் சடங்குகளை ஓர் சீர் வரிசைப்படுத்துவதற்காக பாக்குத்தெண்டல் தொடக்கம் சிலாவத்தை தீர்த்தக்கரையில் தீர்தம் எடுத்தல்
காட்டா விநாயகர் ஆலயத்தில் தீபமேற்றுதல் போன்ற பல சடங்குகளை அருளி நின்றார்

வற்றாப்பளை கண்ணகி அம்மனின் வைகாசி விசாகப்பொங்கல் சடங்கு பற்றி கோவிலுடன் நீண்ட தொடர்பை பேணி வந்த குடியானவர்களுக்கு மரவு வழியாக அறிவிக்கும் பொங்கலின் ஓர் ஆரம்ப சடங்கே இந்த பாக்குத்தெண்டல் உட்சவமாகும்

இந்த தினத்திலே அதிகாலை இரண்டு மணியளவில் காட்டா விநாயகர் ஆலயத்தில் வழிபாடுகளை தொடர்ந்து கோவிலுடன் நீண்ட தொடர்பை பேணி வந்த குடியானவர்களுக்கு மரவு வழியாக அறிவிப்பதற்காக அவர்களது வீடுகளுக்கு சென்று பாக்குத்தெண்டல் இடம்பெறும் இந்த சம்பிரதாய நிகழ்வோடு ஆரம்பமாகும் உட்சவம் வற்றாப்பளை கண்ணகி அம்மனின் வைகாசி விசாக பொங்கலுடன் நிறைவடையும்

அந்தவகையில் இன்று (30-05-2022) பாக்கு தெண்டலுடன் ஆரம்பமான இவ்வாண்டுக்கான (2022) வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உட்சவத்தில் 06-06-2022 திங்கட்கிழமை தீர்த்தம் எடுக்கும் நிகழ்வும் அதனை தொடர்ந்து 13-06-2022 திங்கட்கிழமை வற்றாப்பளை கண்ணகி அம்மனின் பொங்கல் உட்சவத்துடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது

புகையிரத ஆசனங்களுக்கான கட்டணம் அதிகரிப்பு

இலங்கையில் புகையிரதத்தில் ஒதுக்கப்பட்ட ஆசனங்களுக்கான கட்டணத்தை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக கூறப்படுகின்றது.

அதனடிப்படையில் 30 சதவீதத்தினால் இவ்வாறு கட்டண அதிகரிப்பு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பேருந்து கட்டண அதிகரிப்பிற்கு அமைய இவ்வாறு கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜூன் மாதம் 1 ஆம் திகதி முதல் இவ்வாறு கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் தலைசுற்ற வைக்கும் சைக்கிளின் விலை!

இலங்கையில் டொலர் தட்டுப்பாடு காரணமாக சைக்கிள் ஒன்றின் விலை 100 சதவீதம் வீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி பெண்கள் பயன்படுத்தும் சைக்கிள் மற்றும் சைக்கிளின் விலை 18,000 ரூபாயிலிருந்து 36,000 வரை உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து வாகனங்களின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ள நிலையில் சைக்கிளின் விலையும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.