Home இலங்கை பரிதாபமான முறையில் உயிரிழந்த 17மற்றும் 18வயதுடைய இரு மாணவர்கள்

பரிதாபமான முறையில் உயிரிழந்த 17மற்றும் 18வயதுடைய இரு மாணவர்கள்

0
பரிதாபமான முறையில் உயிரிழந்த 17மற்றும் 18வயதுடைய இரு மாணவர்கள்

நேற்று ( திங்கட் கிழமை ) பிற்பகல் ரத்தோட்டை, சுது கங்கையில் ஜமன்வத்தை பகுதியில் நீராட சென்ற பாடசாலை மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

இரண்டு நண்பர்களுடன் நீராடச் சென்ற 17 வயதுடைய மாணவன் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து காணாமல் போன மாணவனை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன், ரத்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை சாவகச்சேரி இந்து மகா வித்தியாலயத்திற்கு முன்பாக உள்ள புகையிரத பாதையில் புகையிரதத்துடன் மோதி பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவர் மேலதிக வகுப்பில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கடுகதி புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் கொடிகாமத்தைச் சேர்ந்த 18 வயதுடைய உதய குமார் பானுஷன் என்ற உயர்தர மாணவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here