Home இலங்கை தாழிறங்கிய பாலம் – வீதியால் செல்பவர்கள் அவதானம்!

தாழிறங்கிய பாலம் – வீதியால் செல்பவர்கள் அவதானம்!

0
தாழிறங்கிய பாலம் – வீதியால் செல்பவர்கள் அவதானம்!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு வீதியில் முற்காலம் தொட்டே முதன்மையான பாலமாக காணப்படும் வட்டுவாகல் பாலம் நீண்டகாலமாக புனரமைக்கப்படாத நிலையில் காணப்படுகின்றது.

பாலத்தில் அவ்வப்போது ஏற்படும் வெடிப்பு மற்றும் பாதிப்புக்கள் சீர்செய்யப்பட்டு வருகின்ற நிலையில் தற்போது பாலத்தில் ஒரு பகுதியில் வீதி தாழிறங்கிய நிலையில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

இந் நிலையில் இவ் வீதியினை பயன்படுத்தும் சாரதிகள், கடற்தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும்அவதானமாக பயணிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், நீண்டகாலமாக குறித்த பாலம் புனரமைக்கப்படாத நிலையில் தொடர்ச்சியாக கடற்தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த பாலத்தினை புனரமைத்து தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here