நேற்று காலை தெஹல்கமுவ பிரதேசத்தில் 65 வயதுடைய பெண் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இலங்கை கொகரெல்ல காவல்துறை பிரிவிற்குட்பட்ட இறப்பர் தோட்ட பகுதியிலுள்ள வீடொன்றில் பெண் ஒருவர் தனது மகனால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர், தெஹல்கமுவ, இப்பாகமுவ பகுதியைச் சேர்ந்தவர் எனவும் காவல்துறையின் ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
உயிரிழந்த பெண்ணின் தலையில் இரும்பு கம்பியால் குத்தியே இந்த கொலை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அந்த பெண்ணைக் கொலை செய்த அவரது மகன் மனநலம் பாதிக்கப்பட்டவர் என காவல்துறையின் விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
கொலையை செய்த சந்தேக நபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கொகரெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.