யாழ் வேலணையை சேர்ந்த லாவண்யா- சுகந்தன் இலங்கையில் அதி குறைந்த வயதில் தரம் ஒன்றில் கல்வி நிர்வாக சேவை அதிகாரியாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் வேலணையை சேர்ந்தவரும் வேலணையூர் சரஸ்வதி வித்தியாலயத்தில் தனது கல்வியை மேற்கொண்டு ஐந்தாம் தர புலமைப் பரிசில் சித்தியடைந்தார்.
அதன் பின்னர் யாழ் வேம்படி மகளிர் கல்லூரியில் இடைநிலை உயர்தரக் கல்வியை மேற்கொண்டு மருத்துவ பீடத்துக்கு தெரிவாகும் சந்தர்ப்பத்தை நாட்டுச் சூழ்நிலை காரணமாக இழந்து யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்திற்கு தெரிவாகி திறம்பட கல்வியை முடித்தார்.
பின்னர் தான் இழந்த சந்தர்ப்பத்தை மீண்டும் நிலைநிறுத்துவதற்காக கடினமாக கல்விகற்று கல்வி நிர்வாக சேவையில் மிகக்குறைந்த வயதில் சித்தியடைந்தார். இன்று இலங்கையில் அதி குறைந்த வயது தரம் ஒன்றுக்கு பதவி உயர்த்தப்பட்டது சாதனையான விடயமாகும்.
இந்நிலையில் அவருடைய முன்னேற்றம் நமது மண்ணுக்கு பெருமை சேர்ப்பதாக அமைகின்றதாக பலரும் லாவண்யாவுக்கு வாழ்த்துக்களை கூறிவருகின்றனர்.