காலபோக நெற்செய்கையினை புதுக்குடியிருப்பு வள்ளிபுனம் இடைக்கட்டு குளத்தின் கீழ் மேற்கொண்ட விவசாயி ஒருவர் தனது நெல்லினை அறுவடை செய்து பைகளில் அடுக்கி வயலில் வைத்திருந்துவிட்டு ஏற்றுவதற்காக உழவு இயந்திரத்திற்காக காத்திருந்த வேளை நெல் அடுக்கப்பட்டிருந்த பகுதிக்குள் புகுந்த காட்டுயானைகள் விவசாயினை துரத்தி கலைத்திவட்டு நெல் பைகளை நாசம் செய்துள்ளன.
நேற்று இரவு இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது வள்ளிபுனத்தில் வசிக்கும் நாகராசா என்ற விவசாயி இடைக்கட்டு குளத்தின் கீழ் இரண்டு ஏக்கர் நெற்செய்கையினை மேற்கொண்டு மிகவும் கஸ்ரப்பட்டு அதிக விலைக்கு உரத்தினை வாங்கிபோட்டு, களைநாசினியினை பயன்படுத்தி செய்கையினை மேற்கொண்ட நிலையயில் இந்த சோக சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நகராசா என்ற விவசாயி வறுமைக்காட்டிற்கு உட்ப்ட குடும்பமாக வயோதிப நிலையிலும் தனது உறவு பிள்ளைகளான பெற்றோர் இல்லாத மூன்று பிள்ளைகளை வளர்த்து வருகின்றார்.
இன்னிலையில் காலபோக நெற்செயின் விளைச்சலை அறுவடை செய்து வீட்டிற்கு கொண்டு செல்ல தயாராக இருந்த நெல்லில் 20 நெல்லு பைகளை யானை நாசப்படுத்தி உண்டுள்ளது.
மூன்று யானைகள் குறித்த வயல்நிலத்திற்குள் புகுந்து நெல்லு பைகளை நாசம் செய்துள்ளன.தற்போது நெல்லுக்கு அரசாங்கம் நல்ல விலை அறிவித்துள்ள நிலையில் காட்டுயானையினால் தான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர் இதற்கான இழப்பீட்டினை அரசாங்கம் பெற்றுத்தரவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.