Home இலங்கை சட்டத்தை மதிக்காத சதொச ஊழியர்கள்…

சட்டத்தை மதிக்காத சதொச ஊழியர்கள்…

0
சட்டத்தை மதிக்காத சதொச ஊழியர்கள்…

வவுனியா நகர சதொச கிளையில் குறித்த கிளையில் மக்கள் அதிகளவில் வந்து போகும் நிலையில் இன்று காலை அங்கு பொருள் கொள்வனவு செய்ய வந்தவருக்கும் ஊழியர் ஒருவருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில், பொலிஸார் அங்கு வருகை தந்து குறித்த விடயம் தொடர்பில் விசாரணையில் ஈடுபட்டனர். அத்துடன் அங்கு பணிபுரியும் பெண் பாதுகாப்பு உத்தியோகத்தர், முகக் கவசத்தை தனது உடையில் வைத்துள்ள நிலையில், பொலிஸாருக்கு முன்பாக முகக் கவசமின்றியே காணப்பட்டார்.

இதேவேளை, பொருள்களைக் கொள்வனவு செய்ய வந்தவர்களும் குறித்த சதொச கிளையில் சில ஊழியர்கள் முகக் கவசமின்றியே கடமையில் ஈடுபடுவதாகத் தெரிவித்தனர்.

நாட்டில் கொரோனா தொற்று அபாயநிலை மீண்டும் தோன்றியுள்ள நிலையில், , இது தொடர்பில் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதேவேளை நாட்டில் மீண்டும் கொரோனா தொற்றும் அபாயம் தோன்றியுள்ள நிலையில் சுகாதாரவழிமுறைகளை பின்பற்றுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here