இன்று(11)அநுராதபுரம் – புத்தளம் பிரதான வீதியின் சாலியவெவ பகுதியில் 19ஆவது மைல் கல் பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று காருடன் மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறையினர் கூறியுள்ளனர்.
குறித்த விபத்துக் காரணமாக மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரின் பாதம் உடலில் இருந்து தனியாக கழன்று சென்றுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளனர்.













































