இலங்கையில் பிற கால்நடைத் தீவன உற்பத்திக்கான மூலப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதால், கால்நடைத் தீவன விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.
இலங்கையில், கடந்த ஒன்றரை மாதங்களாக செல்லப் பிராணிகளுக்கான உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதற்கு நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடியே காரணமென செயலாளர் கலாநிதி நுவான் ஹேவாகமகே தெரிவித்துள்ளார்.மேலும்
இவ்வாறான பின்னணியில், முட்டையின் விலை குறைந்துள்ளதால், தொழிலை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக, முட்டை உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.