பிந்திய செய்திகள்

மதுவரித் திணைக்களத்தின் தீர்மானம் – மதுப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

மதுவரித் திணைக்களம் பீர் மற்றும் வைன் விற்பனைக்கு அனுமதி வழங்கப்படாத சில இடங்களுக்கு சட்டரீதியான அனுமதி வழங்க தீர்மானித்துள்ளது.

சுற்றுலாப் பயணிகளுக்கு உணவு, பானங்கள் மற்றும் தங்குமிடங்களை வழங்குவதற்காக வணிகங்களை பதிவு செய்துள்ள உணவகங்கள், ஹோட்டல்கள் மற்றும் விருந்தினர் மாளிகைகளுக்கு பீர் மற்றும் வைன் விற்பனை செய்வதற்கான உரிமங்களை வழங்க எதிர்ப்பார்ப்பதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

புதிய முறையின் ஊடாக தற்போது உரிமம் இல்லாமல் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்கனவே மதுபானங்களை விற்பனை செய்யும் உணவகங்கள், ஹோட்டல்கள் மற்றும் விருந்தினர் மாளிகைகள் சட்ட கட்டமைப்பில் சேர்க்கப்படுவதால் இட உரிமையாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் எதிர்கொள்ளும் எதிர்பாராத சிரமங்களைக் குறைக்கும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனூடாக சட்டப்பூர்வ மது விநியோகச் சங்கிலியில் இந்த இடங்களைச் சேர்ப்பதன் மூலம், அவற்றில் சட்டப்பூர்வ மற்றும் தரமான மதுபானங்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுவதை உறுதி செய்ய முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனூடாக நியாயமற்ற விலையில் சுற்றுலாப் பயணிகளுக்கு மதுபானம் விற்பனை செய்வதைக் தடுக்கலாம்.

சுற்றுலா அமைச்சு மற்றும் சுற்றுலா ஊக்குவிப்பு அதிகார சபையின் ஒத்துழைப்புடன் நிதியமைச்சு மற்றும் நிதிக் கொள்கை திணைக்களத்தின் அனுமதியுடன் இந்த பீர் மற்றும் வைன்களை விற்பனை செய்வதற்கான புதிய மதுவரி உரிமம் வழங்கும் முறையை நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts