Home இலங்கை மாங்குளத்தில் புகையிரத கடவையில் யுவதி உயிரிழப்பு!!

மாங்குளத்தில் புகையிரத கடவையில் யுவதி உயிரிழப்பு!!

0
மாங்குளத்தில் புகையிரத கடவையில் யுவதி உயிரிழப்பு!!

இன்று (04) மதியம் வவுனியா ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றிவரும் யுவதி உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் சிறிது காலம் வீட்டில் வாழ்ந்த நிலையில், வீட்டில் இருந்து அம்மம்மா வீட்டிற்குச் சென்று வருவதாக சொல்லிவிட்டு சென்ற நிலையில்

முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் புகையிரத்தில் மோதுண்டு யுவதி உயிரிழந்துள்ளார்.

மாங்குளம் கற்குவாரிப்பகுதியில் வசித்து வரும் 22 அகவையுடைய திருச்செல்வம் நிதர்சனா என்ற இளம் யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Gallery

சம்பவம் தொடர்பில், மாங்குளம் காவல்துறையினர் விபத்தா? தற்கொலையா? என்ற கோணத்தில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Gallery

மாங்குளம் புகையிரத நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த சடலத்தினை முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா வருகை தந்து, பார்வையிட்டு உடலத்தினை பிரேத பரிசோதனைக்கு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here