பிந்திய செய்திகள்

ஆரம்பித்த சுற்றுலா புகையிரத சேவை

நேற்று (05) முதல் கண்டி – தெமோதர சுற்றுலா புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது கண்டியில் இருந்து காலை 7 மணிக்குப் புறப்படும் இந்த புகையிரதம் பிற்பகல் 2.45ற்கு தெமோதரரையை சென்றடையும். பேராதனைச் சந்தி, கெலி-ஓயா, நாவலப்பிட்டி, ஹட்டன், கிரேப் வெஸ்டன், நானு-ஓயா, பட்டிபொல, ஒஹிய, இந்தல்கஸ்ஹின்ன, ஹப்புத்தளை, எல்ல மற்றும் தெமோதர புகையிரத நிலையங்களில் இந்த புகையிரதம் நிறுத்தப்படும்.

அதேபோல் கொஸ்டல் நீர்வீழ்ச்சி, சிவனொளிபாதமலை, சென் கிளயார் நீர்விழ்ச்சி, எல்ஜின் நீர்வீழ்ச்சி, ஒன்பது வளைவுப்பாலம் ஆகிய சுற்றுலா இடங்களிலும் இந்த புகையிரத நிறுத்தப்படும். இந்த இடங்களில் இரண்டு முதல் 15 நிமிடங்கள் புகையிரத நிறுத்தப்படும். அதன் பின்னர் இந்த புகையிரத மாலை 3.40ற்கு தெமோதரப் பிரதேசத்தில் இருந்து புறப்பட்டு இரவு 9.35ற்கு கண்டியை சென்றடையும்.

இந்த பயணத்தின்போது சுற்றுலா இடங்களில் ரெயில் நிறுத்தப்பட மாட்டாது. அனைத்து ஆசனங்களும் முன்கூட்டியே ஒதுக்கப்பட வேண்டும். ஆயிரம் ரூபா முதல் 5 ஆயிரம் ரூபா வரை கட்டணம் அறவிடப்படும். உலகின் மிக ரம்மியமான பத்து பயணப் பாதைகளில் ஒன்றாக இந்த அடைவிடம் அடையாளம் காணப்பட்டிருப்பதாக புகையிரத பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர மேலும் தெரிவித்துள்ளார்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts