இலங்கையில் நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் மூன்று மாதங்களில் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார்.
அத்துடன் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளும் விரைவில் வெளியிடப்பட உள்ளதாகவும், பெறுபேறு வெளியிடுவதற்கான இறுதிக்கட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவகின்றன.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இன்றைய தினம் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும், உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடுகளுக்காக சில பாடசாலைகள் எதிர்வரும் 12ஆம் திகதி வரையில் மூடப்பட்டிருக்கும்.
2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடாத்தப்படவிருந்த உயர்தரப் பரீட்சை கொரோனா பெருந்தொற்று நிலைமைகளினால் கடந்த பெப்ரவரி மாதம் ஆரம்பிக்கப்பட்டு மார்ச் மாதம் 6ஆம் திகதி முடிவடைந்தது.
கொரோனாத் தொற்றுக்கு இலக்கான 284 மாணவ மாணவியர் பரீட்சைக்கு தோற்றிய போதிலும் அவர்களுக்கு எவ்வித பிரச்சினைகளுமின்றி பரீட்சைக்குத் தோற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் கூறியுள்ளார் .