Home இலங்கை நீண்ட வரிசையில் எரிபொருளைப் பெறுவதற்கு காத்திருக்கும் மக்கள்!

நீண்ட வரிசையில் எரிபொருளைப் பெறுவதற்கு காத்திருக்கும் மக்கள்!

0
நீண்ட வரிசையில் எரிபொருளைப் பெறுவதற்கு காத்திருக்கும் மக்கள்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளாந்தம் எரிபொருள் தட்டுப்பாடு இடம்பெற்று வரும் நிலையில் பெற்றோல், டீசல் எரிபொருளினைப் பெறுவதற்கு பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று சிரமப்படுவதை அவதானிக்க முடிகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை மற்றும் ஓட்டமாவடி பிரதேசத்தில் விவசாய செய்கையில் ஈடுபடும் விசாயிகள், வாகனங்களை கொண்டு அன்றாட தொழில் ஈடுபடும் சாரதிகள் தங்களது வாகனத்திற்கான எரிபொருளினை பெற்றுக் கொள்வதற்கு நாளாந்தம் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் பெறுவதற்காக காலை ஆறு மணி முதல் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை காணப்படுவதுடன், அவ்வாறு காத்திருந்து நிரப்பு நிலையத்திற்குள் நுழையும் போது எரிபொருள் முடிந்துள்ளது என்று கூறுவதாக வாகன சாரதிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

தற்போது சிறுபோக விவசாய செய்கை ஆரம்பித்துள்ள நிலையில் விவசாய செய்கையை மேற்கொள்ள உழவு வேலைகள் செய்வதற்கு டீசல் இன்மையால் விவசாய செய்கை பின்னோக்கி செல்லும் நிலைமை காணப்படுகின்றது.

இதனால் விவசாய செய்கையை செய்ய முடியாமல் டீசலுக்கு பல மணி நேரம் வெயிலில் இருக்க வேண்டிய நிலைமை காணப்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை மற்றும் ஓட்டமாவடி பிரதேசத்தில் காணப்படும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் சிலவற்றில் பெற்றோல் மற்றும் மண்ணெண்ணைய் காணப்படுகின்றது.

சில நிலையங்களில் பெற்றோல் மற்றும் மண்ணெண்ணைய் இல்லை. மக்கள் இதனால் நாளாந்தம் சிரமப்படுவதுடன், அன்றாட தொழிலாளர்களின் தொழில் முற்றாக பாதிப்படைந்து காணப்படும் நிலைமை உருவாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here