நேற்று (25) பிற்பகல் வவுனியா ஏ9 வீதியில்இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான வாகனம் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நகரிலிருந்து ஏ9 வீதியூடாக பயணித்துக்கொண்டிருந்த வாகனம் அரசாங்க விதை உற்பத்தி பண்ணைக்கு அருகே சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் வாகனத்தின் சாரதி உட்பட இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.













































