நேற்று சனிக்கிழமை(26) இரவு 10.30 மணியளவில் யாழ்ப்பாணம் புங்குடுதீவில் பிரதான வீதியில் உள்ள பலசரக்கு வர்த்தக நிலையம் ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் எரிந்து சாம்பலாகியுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட கடை உரிமையாளர்கள் கருத்து தெரிவிக்கையில் புங்குடுதீவு 1 ஆம் வட்டாரம் சந்தியடியில் பலசரக்கு கடை(பி.ஏ.ஸ்டோர்) அமைந்துள்ளதுவழமை போன்று கடையினை மூடிவிட்டு 9 மணியளவில் வீடு திரும்பியுள்ளார்கள்.
கடை தீ பற்றி எரிவரை எதிரில் உள்ள பிரதேச சபை உப அலுவலக காவலாளி தொலைபேசியில் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து கடைக்கு சென்று பார்த்தபோது அங்;கிருந்த பொருட்கள் அனைத்தும் தீக்கிரையாகிவிட்டன இதன் தொடர்ச்சியாக காணப்பட்ட மரக்கறிகடை,தையல் கடை,பலசரக்குகடை ஆகியன மூன்றும் முற்றாக எரிந்துள்ளன.
இதன்போது 12 இலட்சம் பெறுமதியான பொருட்கள் எரிந்து சாம்பலாகியுள்ளன.பொலீஸ் விசாரணையின் போது மின் ஒழுக்கு எதுவும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளார்கள்.
2009 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து 20 ஆயிரம் ரூபா முதலில் கடையினை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்த பலசரக்கு கடையின் உரிமையாளர்கள் வறுமையின் பிடியில் சிக்கி கிட்னியை விற்று வாழ்க்கை நடத்தி முன்னேறி வந்த நிலையில் இந்த சம்பவம் கவலையளிக்கின்றது பாதிக்கப்பட்ட வர்த்தக நிலைய உரிமையாளர் தெரிவித்துள்ளார்.